பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ பார் i, து உபதேசம் செய்த காலத்து தெசஷ்னா மூர்த்தியான குமாரக்கடவுள், தனது கைப் பெருவிரல் நுணியையும், ஆட்காட்டி விரல் நுனியையும், சேர்த்தும், மற்ற மூன்று விரல்களையும் மேலே உயர்த்தியம். சின் முத்திரையாகக் காட்டினார். அதாவது 1 &யும், 2 ஐயும், கூட்டி வந்த 3 னால், சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய மூன்று சக்திகளடங்கிய ஜோதிமயமான பூரீமந் நாறாயணனைக் காட்டினார். இதில் சத்து, சித்து, ஆனந்தம். பிதா, குமாரன், பராசக்தி, அல்லது பிர்ம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற மூன்று சக்திகளும் அடங்கினவாம்.

கையில், பெருவிரலின்றேல் மற்ற நான்கு விரல்களும் பிரயோஜனப் படாவாம். ஆனதால் பெருவிரலானது ஏகம் அல்லது ஒன்று எனத் தனித்து நின்றதைப்போல இங்கே சிவம் அல்லது பிரம்மம் என்று

தனித்து நின்றது.

அன்பின் திகழ்ச்சியின் காரணமாக தனித்து நின்ற அவ்வொன்றே இரண்டாகப் பிரிந்தது. ஏனென்றால் அன்பிற்கு அவ்வொன்று இரண்டாக வேண்டியதவசியம். அவ்விதமில்லா விட்டால் ஒருதலைக் காமமாகும். இந்த நியாயத்தை பெருவிரலுக்கடுத்த 2-வது ஆட்காட்டி விரலினால் நான், நீ யென்று கட்டிக் காட்டுகிறோம், ஆகையால், இந்த ஆட்காட்டி விரலானது இரண்டு ஆன்மாக்களைத் தன்னிடம் அடக்கியுள்ளது. ஆதியில் ஏகமாய் நின்ற மூலக்கடவுளும், இரண்டாகப் பிரிந்த சக்தியும் சேர்ந்து சகல சிருஷ்டியையும் செய்ய வல்லமை

வாய்ந்த பூரீமந் நாராயணனைக் காட்டியது.

I 3 I