பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த மகாகவி கம்பனே நமது மன்னரது மேதா விலாசத்தைக்கண்டு மயங்கி கம்பு (கழி) என வியந்துநின்றார் என இன்னொரு புலவர் பாடியிருப்பது வெறுங்கற்பனையல்ல. இதோ அவரது அற்புதக் கற்பனையைக் கொண்ட கவிதை

ff கம்பனும் கண்டு மயங்கிக்

கம்பென நிற்கும் வகை வம்புபுகழ் அமுதென்ன வண்சொல்லும்

பொருட்பொலிவும் பம்பிய கற்பனைச் சுவையும்

பல்கு கவி பல பகர்வோர் உம்பர் பிரான் எனப் புலவர் உறும்

அவையில் ஒளி பெரியோன் !

இத்தகைய பேரறிஞர் மிகவும் குறுகிய முப்பத்து இரண்டாவது ஆண்டில் காலமானது தமிழுக்கும் தமிழ் இசைக்கும் ஈடு இணையற்ற பெரும் இழப்பாகும்.

இவருக்கு இரண்டு ஆண் மக்களும் நான்கு பெண் குழந்தைகளும் இருந்தனர். ஆண் மக்களின் முத்தவர் பாஸ்கரர் (கி.பி.1868-1903) என்றும், இளையவர்தினகர் (கி.பி.1871-1942) என்றும் அழைக்கப்பட்டனர் தங்களுக்கு அடுத்தடுத்து ஆண் மக்கட்பேறு கிடைத்தால், அந்த குழந்தைகளுக்கு முறையே இராமர், லெட்சுமணர் எனப் பெயரிடுவது அந்தக் கால வழக்கமாகயிருந்தது. இந்தப் பழக்கத்தைத் தவிர்த்து இந்த மன்னர் தமது இரண்டு ஆண் மக்களுக்கு உலகின் அனைத்து மக்களது

4.