பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துக்களைக் கொட்டி சொற்பெருக்காற்றும் செந்நாப்

புலவர்.

மேலும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து தக்க கொடைகள் வழங்கியும் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை கி.பி.1901ல் தோற்றுவிப்பதற்கு வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். ஆண்டுதோறும் இராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தமிழிலும் வட மொழியிலும் வல்ல வித்தகர்களுக்குச் சிறப்பு செய்தும் பல்வேறு துறையில் வல்லுநராக விளங்கிய கலைஞர்களையும் சிறப்பித்தும் சன்மானம் வழங்கும்

அரிய பழக்கத்தைக் கொண்டு இருந்தார்.

இவைகளுக்கொல்லாம் மேலாக இந்த மன்னர் செய்த அரியசாதனை கி.பி.1893ல் அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் இந்து மதச் சிறப்பையும் இந்தியக்கலை பண்பாட்டுப் பெருமைகளையும் பறை சாற்றுவதற்கு சுவாமி விவேகானந்தரைத் தேர்வு செய்து தமது சொந்தச் செலவில் அங்கு அனுப்பி வைத்தது ஆகும்.

சேதுபதிகளில் ஆங்கிலப் படிப்பும் பட்டமும் பெற்ற முதல் மன்னர் பாஸ்கரர் சேதுபதி. மதுரையில் இயங்கிவரும் சேதுபதி மேனிலைப்பள்ளி இவரது கொடையில் பிறந்தது. மதுரைக் கல்லுரரியும் சென்னை தாம்பரம் சிறித்தவக்கல்லுரரி மற்றும் பல கல்வி நிறுவனங்களும் மாணவர் விடுதிகளும் இவரது கொடை உள்ளத்தின் மறுவடிவாக எழுந்தன. இந்த இளம் -

6