பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடங்கினார் தினகரர் .

ஜரோப்பிய நாட்டு கோதிக் பாணியில் தினகரரது மாளிகை விரைவில் கம்பீரமாக எழுந்தது தென்றல் தவழ்ந்து வரும் தெற்கு திசையில் சம சதுர வடிவில் மூன்று தலைவாயில்களையும் கிழக்கிலும் மேற்கிலும் இரு வாயில்களையும் கொண்டதாக அந்த மாளிகை நிர்மாணிக்கப்பட்டது. வாசல்களும், ஜன்னல்களும். மிகப்பெரியதாகவும் மேல்புறம் வளைவுகளாக இல்லாமல் குதிரைக் குளம்பு வடிவில் அமைக்கப்பட்டு ஒரு புதிய மாளிகையை ஏற்படுத்தப்பட்டது. இந்த மாளிகையைச் கற்றி கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வண்ண மலர்ச்செடி கொடிகளின் மாட்சியும் காட்சியும் பொலிந்து விளங்கின. இனிது இனிது ஏகாந்தம் இனிது என இயம்பும் வண்ணம் இந்த மாளிகை அமைதிச் சூழலில் அமைந்தது. விரைவிலேயே மங்கள நாண் அணிந்த மணப்பெண்ணுடன் தினகரது இல்லற வாழ்வு அங்கு தொட்ங்கியது. நற்குடிப்பிறந்த நங்கையை தினகர் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். அவரது பெயர் சேதுமுத்து நாச்சியார் என்பதாகும். முதுகுளத்துரர் வட்டம் கருமல் என்ற கிராமத்தின் பெருந்தனக்காரரது ஒரே

பெண் அவர்.

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்ற மூதுரைக்கிணங்க இந்த இளம்தம்பதியரின் இல்லறம் தொடர்ந்தது. ஆனால் இதே மனனமாட்சியின் மறு உருவான மக்கட்பேறு எய்தாதது வேதனையை வார்த்தது. இதைவிட இன்னும் வேதனைமிக்க செய்தி, தமையனார்

மன்னர் பாஸ்கர சேதுபதி கால்மான போது அவரது

19