பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தாற் புலனாகும். ஆகவே தில்லைப் பெருங்கோயிலில் அர்த்த யாம வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். அர்த்த யாமத்தில் தில்லைக் கூத்தப்பெருமானுக்குத் தீபாராதனை நிகழ்ந்த பின், சிற்சபையிலுள்ள பெருமான் திருவடி சிவிகையிலமர்த்தப்பெற்று வலமாகப் பள்ளியறையில் வைக்கப்பெற்றுத் தீபாராதனை செய்யப்பெறும். அதன் பின்னர் சண்டேசுரர்க்கும் பயிரவர்க்கும் தீபாராதனை நிகழும். பின்னர் அர்த்தசாம அழகர் தீபாராதனையுடன் அர்த்தசாம வழிபாடு நிறைவு பெறும். இல்வாறு நாள்தோறும் இக்கோயிலில் நிகழ்த்தப் பெறும் வழிபாடு எந்த அதிகாரியையும் எதிர் பாராமல் குறித்த காலத்தில் நிகழ்த்தப் பெற்று வருகின்றது. நடராசப் பெருமானுக்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவோணத்திலும் ஆனித்திருவுத்தர நாளிலும், ஆவணி வளர்பிறைச் சதுர்த்தசியிலும் புரட்டாசி வளர்பிறைச் சதுர்த்தசியிலும் மார்கழித்திருவாதிரையிலும் மாசிவளர் பிறைச் சதுர்த்தசியிலும் ஆக ஆறு அபிடேகங்கள் நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் பல நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் கூத்தப்பெருமானுக்கு நிகழும் பெரிய திருவிழாக்கள் ஆனித்திருமஞ்சனமும் மார்கழித்திருவாதிரையும் என இரண்டாகும். இத்திருவிழாக்களில் கொடியேற்றம் முதல் எட்டாந் திருவிழா முடிய விநாயகர், கப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசர் ஆகிய பஞ்சமூர்த்திகள் காலை மாலை இரு பொழுதிலும் திருவீதிக்கு எழுந்தருளுவர். ஒன்பதாந் திருநாள் விடியற்காலை கூத்தப் பெருமானும் சிவகாமியம்மையும் சிற்றம்பலத்தினின்றும் எழுந்தருளித் தேர்மேலமர்ந்து விநாயகர் முருகன் சண்டேசருடன் திரு வீதியில் உலா வந்தருள்வர். மாலை தேரினின்றும் இறங்கி ஆயிரக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி மறுநாள் விடியற்காலை பலரும் கண்டு மகிழத் திருமஞ்சனம் கொண்டருளி, நண்பகல் ஆயிரக்கால் மண்டபத்தினின்றும் புறப்பட்டு அன்பர்கட்கு நடனக் காட்சியருளிச் சிற்றம்பலத்திற்கு எழுந்தருள்வர். கூத்தப்பெருமான் சிலகாமியம்மை காண நடனமாடிக் கொண்டு வரும் இவ்வழகிய தெய்வக் காட்சியே தெரிசனம் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுகின்றது.