பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதூர்

எடுத்துக்கொண்டு வாரும். நாங்கள் மாதிரிக்காக எடுத்துக் கொண்ட தற்குக் காசு கொடுக்க நியாயமில்லை. ஆகையால் நாங்கள் உமக்கு ஒரு பைசாகூடக் கொடுக்கவேண்டிய கடமை ஏற்படவில்லை” என்றனர். -

அதைக் கேட்ட சமயற்காரன் அடக்க இயலாத ஆத்திரமும், ஆச்சரியமும், ஏமாற்றமும், விசனமும் அடைந்து, "ஐயா! நான் ஏழை. நான் இதை முதலாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். இதில் ரூ. 1-2-0 நான் நான் ஒருவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியவன். தயவு செய்து ஏழையக் காப் பாற்றுங்கள்' என்று கூறிக் கைகுவித்துக் குனிந்து அவர்களை வணங்கிக் கெஞ்ச, அவர்களுள் முரடாயிருந்த சிலர் நிரம்பவும் கோபங் கொண்டவர் போல நடித்து அவனைத் தாறுமாறாக வையவும் அதட்டவும் தொடங்கி, "அடேய் அயோக்கிய நாயே! மாதிரி கொடுப்பதற்கே போதாமலிருந்த சொற்ப மிட்டாயியை வைத்துக்கொண்டு நீ விற்றுப் பணம் பிடுங்கவா பார்த்தாய் புது மாதிரியான மிட்டாயியைக் கொண்டுவந்து ருசிபார்க்கச் செய்து எங்களுடைய ஆசையைப் பிரமாதமாகக் கிளப்பிவிட்ட நீ அதற்கு மேல் காசுக்கு மிட்டாயி கேட்டால் இல்லையென்று சொல்லி, எங்களுக்கு அநாவசியமான தொந்தரவு கொடுக்கிறாயா? இப்போது நாங்கள் வேறே மிட்டாயி எதையாவது வாங்கித் தின்றாலன்றி, எங்கள் நாக்கின் தினவு அடங்காதுபோலிருக்கிறது. அதற்கு நீதான் உத்திரவாதி' என்று கூறி அவனை வையவும் அடிக்கவும் முயன்றனர்.

வேறொருவன் அவனுடைய தட்டின் மேலிருந்த காசுக் குவியலின்மீது கையைப் போட்டு ஒன்றுகூட பாக்கி விடாமல் எல்லாவற்றையும் அப்படியே அள்ளிக் கொண்டு கும்பலில் நுழைந்து அப்பால் நகர்ந்து ஓடிப்போய் விட்டான். அதற்குள் வேறு சிலர், "அடேய்! அடேய்! காசை எடுக்க வேண்டாம். அதைக் கொடுத்துவிடு' என்று கடைக்காரனுக்குப் பரிந்து பேசு கிறவர்கள் போலக் கூவிக்கொண்டே, ஒடிப்போனவனை பின் தொடர்ந்து, "அடேய்! நில் நில் ஓடாதே; காசைக் கொடுத்து விட்டுப் போ' என்று கூச்சலிட்ட வண்ணம் அப்பால் நழுவிப் போய்விட்டனர்.

28