பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திவான் லொடபட சிங் பகதூர்

அமர்த்தி திவான் லொடபட சிங் பகதூர் முத்திரைபோட்ட இரசீதுப் புஸ்தகங்களை இலட்சக்கணக்கில் தயாரித்து அவர்களிடம் கொடுத்து ஒவ்வொருவரிடமும் பண வசூல் ஒழுங்காக நடத்தும் படி திட்டம் செய்தான். அந்த நகரத்திலிருந்த ஜனங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், இலை முதலிய சகலமான வஸ்துக்களும் வெளியூர்களிலிருந்தே அவ்விடத்திற்கு வர வேண்டும். ஆதலால், அவ்வாறு சாமான்கள் கொண்டுவரும் ஒவ்வொரு வண்டிக்கும், ஒவ்வொரு தலைக் கூடைக்கும், ஒவ்வொரு மாட்டுப் பொதிக்கும் இவ்வளவு வரிஎன்று விதித்துத் தமது குமாஸ்தாக்களைக் கொண்டு வசூலிக்க ஆரம்பித்தான். அதுவு மன்றி, அந்த ஊரிலுள்ள சகலமான உத்தியோகஸ்தர்களுக்கும் வருமான வரியும், தச்சர், கொல்லர், தட்டார், குயவர் முதலிய தொழிலாளிகளுக்கு எல்லாம் தொழில் வரியும், நிலம் வைத்திருப்பவர்களுக்கு திவான் சாயப் வரி என்ற புதுவரி ஒன்றும் ஏற்படுத்தி, அவைகளை எல்லாம் தினம் தினம் ஒழுங்காகத் தனது குமாஸ்தாக்கள் வசூலித்துக் கணக்கு வைக்கும்படி ஏற்பாடு செய்தான். அந்த ஊரிலுள்ள ஜனங்கள் எல்லோரும் புதிய திவான் நிரம்பவும் கண்டிப்பான மனிதர் என்றும் பரம துஷ்டரென்றும் நினைத்து அவரைப்பற்றிக் கனவிலும் அஞ்சி நடுநடுங்கி இருந்தவர்களாதலால், அவரே அத்தகைய புதிய வரிகளை ஏற்படுத்தி இருக்கின்றா ரென்று நினைத்து அதைப்பற்றி எவ்வித ஆட்சேபனையும் கூறாமல் கொடுத்து வந்தார்கள். நமது சமயற்காரனை நாம் இனி திவான் லொடபட சிங் பகதூர் என்று குறிப்போம். அவருக்கு ஆயிரக் கணக்கிலும் இலக்ஷக்கணக்கிலும் பொருள் குவியத் தொடங்கியதானாலும், அவர் தமது சேவக ஆடைகளை விலக்காமலும், திவானினது வண்டிக் கதவைத் திறந்து மூடும் உத்தியோகத்தை விடாமலும் வெளிப் பார்வைக்கு ஒன்றையும் அறியாத பரம ஸாது போலவே இருந்து, உள்ளூற மகா மகா ஆச்சரியகரமான பெரும் பெரும் காரியங்களையும் ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்து எல்லோரையும் ஏமாற்றி வந்தார். அதுவுமன்றி அவர் இன்னொரு முக்கியமான ஏற்பாட்டையும் செய்யத் தொடங்கினார். திவானுக்கும் மகாராஜனுக்கும் அனுப்பப்படும் தபால்கள், மனுக்கள் முதலிய சகலமான கடிதங்களையும், அவர் முதலில்

45