பக்கம்:திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

அதர்வண வேதம், திருவாய்மொழி சாமவேதம் என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள்.

நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் மக்களுக்கு உறுதிபயக்கக் கூடிய சிறந்த பொருள்களைக் கூறும் நூல்களுள் தலை சிறந்தது. சாத்விக குணக்கடவுளான திருமகள் கேள்வன்தான் இப்பிரபந்தத் தலைவன் திவ்யப்பிரபந்தம் படிப்போர் உள்ளத்தில் பக்தியுணர்வைத் தோற்றுவிக்கிறது. இயல், இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் திவ்யப் பிரபந்தம் சிறந்த நிலைக்களனாகத் திகழ்கிறது. நம்முன்னோர்கள் சுய சிந்தனை வருமுன்னரே சிறுவயதிலேயே நிலையான பொருளில் நாட்டத்தை இறைவனிடம் உள்ள நம்பிக்கையாகத் தெய்வபக்தியாகப் பழக்கிவிடுகின்றனர்.

இறைவனை வழிபடுத்துபவராக நம்பி எவர் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இறைவன் துணையாக நின்று நல்வழியில் அழைத்துச் சென்று அடையவேண்டியதை அவர்கள் அடையச் செய்கிறான். நல்வழியில் செல்ல முற்படுவதும், துணைதேடுவதும், துணைவன் காட்டியப்படி வழி நடப்பதும் சேரவேண்டிய இடத்தை அடைவதும், நம் முயற்சியாலும், உழைப்பாலும் நடைபெறுபவை, தீவிர முயற்சியும் உழைப்பும் இல்லாதவன் சேரவேண்டிய இடத்தை அடையமாட்டான். இதனை உணர்த்த எழுந்ததே கீழ்வரும் பிரார்த்தனை. "அஸ்தோ மா ஸத்கமய / தமஸோ மா ஜோதிர் கமய மிருத்யோர் மா அம்ருதம் கமய என்பது. இந்தப் பிரார்த்தனையில் கம்ய அடையச் செய். அடைய உதவுவாய் என்றே வழிபாடு அமைந்துள்ளது. இப்படி வாழ்க்கையின் பல நிலைகளில் இறைவனை வழிகாட்டியாகவும், உற்ற துணையாகவும், பொறுப்பாளராகவும் கருதி அவருடன் இணையும் உணர்வு கொண்டவர்களையே அடியார்கள் எனப்போற்றி வணங்குகிறோம்.


இறைவனின் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்க்கு அவரது அந்தர்யாமியின் குரல் எப்போதும் தெளிவாகக் கேட்கும். அதனால், அவர் அந்தர்யாமி காட்டிய வழியில் கெட்டதைத்