உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

அள்ளிநீ செய்த தீமையுள்ளன பாவமும்பறையும்படி தள்ளிதாஎழு நெஞ்சமே செங்கண் சேவுடைச் சிவலோகனூர் துள்ளிவெள்ளிள வாளைபாய்வயற் றோன்றுதாமரைப்

117

பூக்கண் மேல் அள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம்தொழப்போதுமே. படையெலாம் பகடார வாளிலும் பௌவஞ்சூழ்ந்தர சாளிலும் கடையெலாம் பிணைத்தேரைவால் கவலாதெழு மடநெஞ்சமே மடையெலாங் கழுநீர் மலர்ந்து மருங்கெலாங் கரும்பாடத்தேன் புடையெலா மணநாறு சோலைப் புறம்பயம்தொழப் போதுமே. முன்னைச் செய்வினை இம்மையின் வந்து மூடுமாதலின் முன்னவே என்னைநீ தியக்காதெழு மடநெஞ்சமே எந்தை தந்தையூர் அன்னச் சேவலோ டூடிப்பேடைகள் கூடிச்சேரு மணிபொழில் புன்னைக் கன்னிகளக்கரும்பு புறம்பயம்தொழப் போதுமே. மலமெலாமறு மிம்மையே மறுமைக்கு வல்வினை சார்கிலா சலமெலாமொழிநெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்குமூர் கலமெலாங்கடன் மண்டு காவிரி நங்கையாடிய கங்கைநீர் புலமெலா மண்டிப் பொன்விளைக்கும் புறம்பயந்தொழப் போதுமே

பண்டரீயன செய்ததீமையும் பாவமும் பறையும்படி கண்டரீயன கேட்டியேல் கவலாதெழு மடநெஞ்சமே தொண்டரீயன பாடித்துள்ளிநின் றாடிவானவர் தாந்தொழும் புண்டரீக மலரும் பொய்கை புறம்பயந்தொழப் போதுமே.

துஞ்சியும் பிறந்துஞ் சிறந்துந் துயக்கறாத மயக்கிவை அஞ்சியூரன் திருப்புறம்பயத் தப்பனைத்தமிழ்ச் சீரினால் நெஞ்சினாலே புறம்பயந்தொழ துய்துமென்று நினைந்தன வஞ்சியா துரைசெய்ய வல்லவர் வல்லவானுல காள்வரே.

திருவாசகம்

கீர்த்தித்திருவகவல்

90. புறம்பய மதனில் அறம்பல அருளியும்.

முற்றிற்று.

மாணிக்கவாசகர்.