பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதற்குலோத்துங்க கோமுன் "தென்றிசைத் தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாடை நன்னிலப் பாவை தனிமையுந் தவிரவந்த புனிதத் திருமணி மகுடம் உரிமையிற் சூடி" 25 எனவும் வரும் முதலாங் குலோத்துங்கசோழன் மெய்க் கீர்த்தி களாலும் உணரலாம். சோழநாடு அரசனின்றி நிலைகுலைந்திருந்த செய்தியை யறிந்து வடபுலத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைந்துவந்த இராசேந்திரனைக் கண்ட அமைச்சர் படைத் தலைவர் முதலான அரசியலதிகாரிகள் எல்லோரும் இவ்வரச குமாரன் தக்க சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியடைத் தார்கள். சோழர் மரபில் முடிசூடுதற்குரிய அரசகுமாரர் எவரு மில்லாமையாலும் கங்கைகொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரனாம் உரிமை இவனுக் கிருத்தலாலும் இவ்விராசேந்திரனே சோழ நாட்டின் அரசனாக முடிசூடும் உரிமை யுடையோன் எனவும் உறுதிசெய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடிசூட்டுதற்குத்தக்க ஏற்பாடுகன் செய்யப் பட்டன. கி.பி. 1070-ஆம் ஆண்டு சூன்திங்கள் 9-ஆம் நானில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இவன் முறைப்படி முடிசூட்டப் பெற்றான். அந்நன்னாளில் இவன் குலோத்துங்க சோழன் என்னும் அபிடோப் பெயரும் எய்தினான். உடனே உண்ணாட்டுக் குழப்பமும் சுலகமும் ஒழியவே, சோழமண்டல மெங்கும் அமைதி நிலவிற்று அப்பொழுது சிற்றரசர்கள் இவன் அடிமிசை அறுகெடுத் திட்டு வணங்கினர்; அந்தணர் ‘அரசர் பெருமாள் நீடு வாழ்க" என்று வாழ்த்தினர்; மனுநெறி எங்கும் தலையெடுக்கவே இவன் புகழ்யாண்டும் பரவுவதாயிற்று. இவனது பேராற்றலையும் இவனால் சோணாடு அடைந்த நலங்களையும், நிழலிலடைந்தன திசைகள் நெறியிலடைந்தன மறைகள் கழவிலடைந்தனர் உதியர் கடலிலடைந்தனர் செழியர்.