உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 இவன் சிங்களப் படைத்தலைவர்களின் உதவியினால் பாண்டிய நாட்டைப் பெற்றுச் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்து, சோழர் படையெடுப்பினால் கி. பி. 1168-ஆம் ஆண்டில் அதனை இழந்து விட்டமையும், பிறகு குலசேகர பாண்டியன், சோழர் படைத் தலைவன் திருச்சிற்றம்பல முடையான் பெரு மானம்பியின் உதவியால் நாடுபெற்று மீண்டும் மதுரையில் ஆட்சிபுரிந்தமையும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. குலசேகர பாண்டியன் இராசாதிராச சோழனுக்குப் பகைஞனாகிப் பாண்டி நாட்டை இழந்த நாட்களில், சோழர்படைத் தலைவனாகிய வேதவன முடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் என்பான் தன் அரசன் ஆணையின்படி இவனுக்கு அப்பாண்டி நாட்டை அளித்தனன். ஆகவே, இவ்வீரபாண்டியன் மறுபடியும் பாண்டிநாட்டைப் பெற்று அரசாளத் தொடங்கினான். இவனது ஆட்சியும் கி.பி. 1180 வரையில் அங்கு நடைபெற்று வந்தது எனலாம்.

கி. பி. 1175-ஆம் ஆண்டில்

இவனுக்குப் பாண்டிநாட்டை வழங்கிய இரண்டாம் இராசதிராச சோழன் ஆளுகையும் சோழநாட்டில் கி. பி. 1178 ஆம் ஆண்டில் முடிவெய்தியது. அவனுக்குப் பிறகு மூன்றாங் குலோத்துங்க சோழன் அவ்வாண்டில் முடிசூட்டப் பெற்றான். வீரபாண்டியன், இராசாதிராசசோழன் தனக்குப் பாண்டி நாட்டை அரசாளும் உரிமை அளித்ததை மறந்து, சிங்கள மன்னனோடு சேர்ந்து கொண்டு, குலோத்துங்க சோழனோடு முரண்பட்ட நிலையில் இருந்தனன். அந்நாட்களில் சடைய வர்மன் குலசேகர பாண்டியனுடைய புதல்வன் விக்கிரம பாண்டியன் என்பான், தன் தந்தையின் நன்றிமறந்த

செயலையும், அதன் பயனையும் எண்ணி எண்ணி மிகவருந்தி, இறுதியில் மூன்றாங் குலோத்துங்க சோழன் பால் அடைக்கலம் புகுந்து, தன் நாட்டைத் தான்பெற்று அரசாளும்படி செய்தல் வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டான்.1

ஆகவே, இவ்வீர பாண்டியனோடு குலோத்துங்க சோழன் போர் தொடங்குவது இன்றியமையாததாயிற்று. எனவே,

1. S. I. I., Vol. VI. No. 436. (திருக்கொள்ளம் பூதூர்க் கல்வெட்டு)