உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

வில்லை. ஆயினும், அக்கல்வெட்டுக்களில் காணப்படும் 'ஸ்ரீகோச்சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு 4 ஆவது மிதுன நாயிற்றுப் பூர்வபட்சத்து நவமியும் வியாழக்கிழமையும் பெற்ற சோதிநாள்* ‘ஸ்ரீகோச்சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலசேகர தேவற்கு யாண்டு பதின்மூன்றாவதின் எதிரா மாண்டு மீனநாயிற்று நாலாந்தியதியும் அமரபட்சத்துத் தசமியும் வியாழக்கிழமையும் பெற்ற பூராடத்து நாள்* ‘ஸ்ரீகோமாறவன்ம ரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமுங் கொண் டருளிய ஸ்ரீகுலசேகர தேவற்கு யாண்டு 2107-ஆவது தநுர் நாயிற்று 104-தியதியும் வெள்ளிக்கிழமையும் அமரபட்சத்து சப்தமியும் பெற்ற உத்திரநாள் என்பன போன்ற காலக் குறிப்புக்கள் அவ்வேந்தர்கள் ஆட்சிபுரிந்த காலங்களை உணர்ந்து கோடற்குப் பெரிதும் பயன்படுகின்றன. அவற்றை ஆராய்ந்து அவற்றால் அறியக்கிடக்கும் ஆண்டுகள் இன்னவை என்று உலகத்திற்கு உணர்த்திய பேரறிஞர்கள், டாக்டர் கீல்ஹார்ன், எல். டி. சுவாமிக்கண்ணுப் பிள்ளை, இராபர்ட்சி வெல், ஜாகோபி என்போர். அவர்களுடைய ஊக்கமும் உழைப்பும் இல்லையாயின் வரலாற்றாராய்ச்சி இருள்சூழ்ந்த நிலையில்தான் இருந்து கொண்டிருக்கும் என்பது திண்ணம். அவர்கள் ஆராய்ந்து கண்ட ஆண்டுகளுள் சில, ஒன்றுக்கொன்று வேறு பட்டிருப்பினும், அன்னோருடைய ஒத்த முடிபுகள் வரலாற்றா ராய்ச்சிக்குப் பெருந்துணையா யிருத்தல் மறக்கற்பாலதன்று. இக்காலப் பகுதியில் பாண்டிய இராச்சியத்தில் வெவ்வேறு

டங்களில் பாண்டி மன்னர் பலர் ஒரே சமயத்தில் அரசாண்டுள்ளனர். அவர்கள் பேரரசர் போல் தம் பெயர்களால் கல்வெட்டுக்களும் வரைந்துள்ளனர். எனினும், அவர்களுள் ஒருவன் வழியினரே தலைமை பூண்டு அரசர்க் கரசராக இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அன்றியும், ஒரே பெயருடைய பாண்டிவேந்தர் பலர் இக்காலப் பகுதியில் ருந்துள்ளனர். அன்னோரைப் பற்றி ஆராய்ந்து உண்மையான

1. S. I. I., Vol. No. 299.

2. Ibid, No. 412.

3. Ibid. No. 426.