உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

87

பெயர்களால் வழங்கிவந்தனன் என்பது இவன் கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது.

இவ்வேந்தன் தன்னுடைய ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டில் சில பழைய ஊர்களை ஒன்றாகச் சேர்த்து, இராச கம்பீரச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் 1030 அந்தணர் களுக்குப் பிரமதேயமாகவும் திருப்பூவணத் திறைவர்க்குத் தேவதானமாகவும் அளித்துள்ளமையால்,1 இவனுக்கு இராச கம்பீரன் என்னும் சிறப்புப் பெயர் அந்நாளில் வழங்கியிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இவனது இருபத் தெட்டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படாமையால், இவன் கி. பி. 1218ஆம் ஆண்டில் இறந்தனனாதல் வேண்டும். இவன் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பான் இளவரசுப்பட்டம் கட்டப் பெற்றான் என்று தெரிகிறது.

சயங்கொண்ட சோழ சீவல்லபன்

இவன் குலசேகர பாண்டியனுடைய ஆட்சியில் சிறப்புற்று விளங்கிய அரசியல் அதிகாரியாவன்;' இவன் பாண்டி மண்டலத்தின் உள்நாடுகளுள் ஒன்றாகிய களவழி நாட்டின் தலைமை அதிகாரியாயிருந்தமைப் பற்றிக் களவழி நாடாள்வான் என்னும் பட்டம் பெற்றவன். இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள குலசேகர பாண்டியன் கல்வெட்டுக்களில் இவனைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

வன் கி.பி. 1216 முதல் கி. பி. 1238 முடிய மதுரை மாநகரில் முடிமன்னனாக வீற்றிருந்து பாண்டிநாட்டை ஆட்சி புரிந்தவன்;* மாறவர்மன் என்ற பட்டமுடையவன்; தன்னுடைய ஆற்றலாலும் வீரத்தாலும் பாண்டிய இராச்சியத்தை நன்னிலைக்குக் கொணர்ந்து பேரரசு நிறுவிய பெருந்தகை வேந்தன். இவனுக்கு

1. Ep. Ind., Vol. XXV, No. 11.

2. Ins. 313 of 1923.

3. Ep. Ind., Vol. VIII. Appendix II, p. 24.