உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

97

அளிக்கப்பெற்ற மழவச்சக்கரவர்த்தி என்னும் ம் பட்டம் பெற்றவன் ஆவன்.

இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்

வன்

இவன் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்று, அவன் இறந்த பிறகு சில திங்கள் ஆட்சி புரிந்து இறந்தனன். சுந்தரபாண்டியனுக்குப் பிறகு அரசாண்ட செய்தி திருத்தங்காலிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.' எனினும், அவனுக்கு இவன் என்ன முறையினன் என்பது தெரியவில்லை. இவன் மெய்க்கீர்த்தி ‘பூதல வனிதை* என்று தொடங்குவதாகும். இவனைப் பற்றிய பிற செய்திகள் இப்போது புலப்படவில்லை.

ரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

இவன் இரண்டாம் சடையவர்மன் குலசேகர

பாண்டியனுக்குப் பின்னர், கி. பி. 1239-ல் முடிசூட்டப்பெற்று, கி. பி. 1251 வரையில் அரசாண்டவன். இவன் மெய்க்கீர்த்தி, ‘பூமலர்த்திருவும் பொருசய மடந்தையும்' என்று தொடங்கு கின்றது. இஃது இவனைப் புகழ்ந்து கூறுகிறதேயன்றி இவன் வரலாற்றை உணர்த்தக் கூடியதாயில்லை. இவ்வேந்தனுக்குப் போசளமன்னனாகிய வீரசோமேச்சுரனும் கொங்குச் சோழனு மாகிய விக்கிரமசோழனும் முறையே மாமனாகவும் மைத்துன னாகவும் இருந்தனர் என்பது இவன் கல்வெட்டுக்களால்" அறியப்படுகின்றது. எனவே, அன்னோர் உறவும் நட்பும் இவன் ஆட்சிக்குப் பெருந் துணையாயிருந்தமை உணரற்பாலதாம். இவன் காலத்தில் சோணாட்டில் அரசாண்டவன் மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவன். அவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று இப்பாண்டியனைப் போரில் வென்று இவன் நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். அந்நாட்களில் இராசேந்திர சோழனோடு போர்புரிந்து அவனை வென்று இவன்

1. A. R. E. for 1923, part II, para 51; Ins, 548 of 1922.

2. S. I. I., Vol. V. Nos. 301 and 428.

3. Ibid, No. 421.

4. S. I. I., Vol. V, Nos. 448 and 421.

5. Ibid.Vol. IV, No. 511.

5