உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

103

யம்பதியிலும் திருவரங்கத்திலும் செய்துள்ள திருப்பணிகள் பலவாகும். முதலில் இவன் தில்லையம்பலத்தில் எழுந்தருளி யுள்ள இறைவனை வணங்கிப் பல துலாபாரதானங்கள்! செய்தமையோடு அப்பெருமான் திருக்கோயிலைப் பொன் வேய்ந்துஞ் சிறப்பித்தனன்.' அக்கோயிலிலுள்ள மேலைக் கோபுரம் சுந்தர பாண்டியன் கோபுரம் என்னும் பெயரால் முற் காலத்தில் வழங்கப் பெற்று வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. எனவே, அக் கோபுரத்தைக் கட்டியவன் இச் சுந்தரபாண்டியனே யாவன்.4

3

பின்னர், இவ்வேந்தன் திருவரங்கத்திற்குச் சென்று திருமாலை வணங்கிக் கோயிலையும் பொன்வேய்ந்து அங்கு முடிசூடிக் கொண்டமையோடு பல துலாபாரதானங்களும் செய்தான். திருவரங்கத்தில் இவன் செய்த திருப்பணிகளும் விட்ட நிவந்தங்களும் அளித்த அணிகலன்களும் பலவாகும். அவற்றை யெல்லாம் அக்கோயிலில் வரையப்பெற்றுள்ள ஒரு பெரிய வடமொழிக் கல்வெட்டிலும், கோயிலொழுகு என்ற வைணவ நூலிலும் விளக்கமாகக் காணலாம்.

5

இங்ஙனம் தில்லையிலும் திருவரங்கத்திலுமுள்ள திருக் கோயில்களைப் பொன் வேய்ந்தமைபற்றி இவன் 'கோயில் பொன்வேய்ந்த பெருமாள்' என்று வழங்கப் பெற்றனன். கோயில் பொன்வேய்ந்த பெருமாள் என்னும் பெயருடன் திருவரங்கப் பெருங்கோயிலிலும் பிற இடங்களிலும்' படிமங்கள் அமைப் பித்து, அவற்றிற்குத் திங்கள்தோறும் தன் பிறந்தநாளாகிய மூலத்தன்று திருவிழாக்கள் நடத்திவருமாறு இவன் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க தொன்றாம்.

1. சிவனரிக் கிம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட், சினமத வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லை மன்றில் வனசத் திருவுடன் செஞ்சொற் றிருவை மணந்த தொக்குங், கனகத் துலையுடன் முத்தத் துலையிற் கலந்ததுவே

(S. I. I., Vol. IV, No. 620)

9

2.S. I. I., Vol. IV, Nos. 628, 629 and 630.

3. Ibid, No. 624.

4. மதுரையில் கீழைக்கோபுரம் அமைத்தவனும் இவனே.

5. Ep. Ind., Vol. III, pp 7-17.

6. Ins. 6 of 1936-37.

7. Ins. 150 of 1904; Ins. 531 of 1920.