உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

1

109

அனுப்பினர். அப்படைத்தலைவன் அந்நாட்டில் பல பகுதி களைப் பேரழிவிற்குள்ளாக்கி, நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரிலிருந்த பெருங்கோட்டையையும் கைப்பற்றினான். இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும் பொருளையும் புத்த தேவரது மாண்பு வாய்ந்த பல்லையும் கைப்பற்றிக்கொண்டு வெற்றியுடன் பாண்டிநாட்டிற்குத் திரும்பினான். பாண்டிய ரோடு போர்புரிந்து அப்பல்லைப் பெறுதற்கு இயலாத நிலையிலிருந்த ஈழநாட்டு மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு என்பான், நம் குலசேகர பாண்டியனைப் பணிந்து நட்புரிமைகொண்டு அதனைப் பெற்றுச் சென்றனன். இச்செய்திகளெல்லாம் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்திலும் சொல்லப்பட்டுள்ளன. இவை கி. பி. 1284-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்தவையாதல் வேண்டும்.

2

இக்குலசேகர பாண்டியன் கி. பி. 1274-ல் சேர நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். அதுபற்றியே, இவ்வேந்தன் ‘கொல்லங் கொண்ட பாண்டியன்' என்னும் பட்டம் எய்துவானாயினன்.

3

இனி, திருநெல்வேலி ஜில்லா சேரமாதேவியிலுள்ள இம்மன்னனது இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று, 4 இவன், மலைநாடு, சோழநாடு, இருகொங்கு நாடுகள், ஈழநாடு, தொண்டைநாடு என்பவற்றை வென்றனன் என்று கூறுகின்றது. அவற்றுள் பல, முதல் சடையவர்மன் வீரபாண்டியனாலும் முன்னரே வென்று பாண்டிய இராச்சியத்திற்கு உட்படுத்தப் பெற்றனவாகும். எனவே, இம்மாறவர்மன் குலசேகர பாண்டியன் தன் ஆட்சிக்காலத்தில் அந்நாடுகளில் நடைபெற்ற சில உள்நாட்டுக் குழப்பங்களையும் கலகங்களையும் அடக்கி

1. The Pandyan Kingdom, pp, 184 and 185. முதல் புவனைகபாகுவின் ஆட்சியின் இறுதிக்காலத்தில்தான் ஆரியச் சக்கரவர்த்தி ஈழநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான் என்று தெரிகிறது.

2. நான்காம் பராக்கிரமபாகு புத்ததேவரது பல்லிற்கு ஈழத்தில் ஒரு கோயில் அமைத்தமை அறியத்தக்கது.

3. A. R. E. For 1926-27, part II, para 42.

4. Ins. 698 of 1916.