உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

1

என்ற சிறப்புப்பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியிருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. அன்றியும், இவன் புறச் சமயங்களையும் பெரிதும் மதித்து ஆதரித்து வந்தனன் என்பது வெளியாதல் காண்க.

மாறவர்மன் வீரபாண்டியன்

இவன் கல்வெட்டுக்கள் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள சிதம்பரம், எறும்பூர், திருவயீந்திரபுரம் என்னும் ஊர்களில் உள்ளன; எனவே, இவன் அப்பகுதியில் அரசப் பிரதிநிதியாயி ருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் ஆட்சிக் காலமும் இவனைப் பற்றிய பிற செய்திகளும் தெரியவில்லை. மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாளாகிய ஆரியச் சக்கரவர்த்தி

வன் மாறவர்மன் குலசேகர பாண்டியனிடத்தில் அமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் விளங்கியவன்; ஈழ நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிப் பெரு வெற்றியுடன் திரும்பியவன்; தனிநின்று வென்ற பெருமாள் என்னும் பட்டம் பெற்றவன்; பாண்டி மண்டலத்துச் செவ் விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி நல்லூரினன் மதிதுங்கன் என்பது இவனது இயற்பெயர் போலும். குலசேகர மாவலிவாணராயன்

3

கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாவலி வாணாதி ராயன் என்னும் பட்டமுடைய சில அரசியல் தலைவர்கள் பாண்டி நாட்டில் இருந்தனர். அவர்களுள், பிள்ளை குலசேகர மாவலி வாணராயன் என்பான் இவ்வேந்தன் காலத்தில் இருந்தவன். புதுக்கோட்டை நாட்டிலுள்ள கோனாடு இவன் மேற்பார்வையில் இருந்தது என்று தெரிகிறது.

1. மூன்றாம் குலோத்துங்க சோழன் இராசாக்கணாயன் என்னுஞ் சிறப்புப் பெயருடையவன் என்றும், எனவே, அவன் தைத்திங்கள் அத்த நாளில் பிறந்தவன் என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன்' என்ற நூலின் ஆசிரியர் எழுதியிருப்பதற்குக் கல்வெட்டுக்களில் சிறிதும் ஆதார மின்மை அறியத்தக்கது.

2. Ins. No. 269, 279, 320 and 386 of 1913; S. I. I., Vol. VII. Nos. 768 and 769. 3. A. R. E. For 1936-37, Part, II. Para 40.