உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




121

9. தென்பாண்டிநாட்டில் ஆட்சிபுரிந்த பிற்காலப் பாண்டியர்கள்

கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் தென்பாண்டி நாட்டிற் பாண்டிய அரசர் சிலர் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்கள் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அன்னோர் பெயர்களை உணர்த்துமளவி லுள்ளனவேயன்றி வரலாற் றுண்மைகளை விளக்கக்கூடியனவாக ல்லை. அவர்கள் தலைநகர் யாது என்பதும் நன்கு தெரியவில்லை. ஆயினும், கொற்கை, தென்காசி, கரிவலம்வந்த நல்லூர் ஆகிய ஊர்கள் அவர்கள் தலைநகரங்களாக இருந்திருத்தல் வேண்டும் என்பது

உய்த்துணரப்படுகின்றது.

1

பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென்பாண்டி நாட்டில் அரசு செலுத்திய பாண்டியர்களுள், பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடையார் மூவர் இருந்தனர். அம்மூவருள் கி. பி. 1387-ல் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தவன் ஒருவன்; கி. பி. 1384 முதல் 1415 வரையில் அரசாண்டவன் மற்றொருவன்; கி. பி. 1401 முதல் 1403 வரையில் ஆட்சி புரிந்தவன் மற்றையோன். அன்றியும், அக்காலப் பகுதியில் சடையவர்மன் குலசேகர பாண்டியன், சடையவர்மன் விக்கிரமபாண்டியன் என்ற வேறிரண்டு மன்னரும் இருந்தமை அறியத்தக்கது. இவர்களுள், குலசேகர பாண்டியன் கி. பி. 1395-ல் பட்டம் பெற்றவன். இவன் கல்வெட்டொன்று கரிவலம்வந்த நல்லூரில் உள்ளது. அஃது இவ்வேந்தனது ஆணைத்திருமுகமாகும்.2 விக்ரமபாண்டியன் கி. பி. 1401 முதல் 1422 வரையில் அரசு செலுத்தியவன். இவன்

1. The Pandyan Kingdom, pp. 246 and 248.

2. Travancore Archaeological Series Vol. I. Page 45.