உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

123

இற்றைநாளிலும் காண்போர் கண்களைக் கவரும் சிற்ப நுட்பமும் வனப்பும் வாய்ந்த தென்காசிப் பெருங்கோயிலை இவ்வேந்தன் எடுப்பித்தது இவனது சிவபக்தியின் மாண்பினை இனிது புலப்படுத்தாநிற்கும். இவ்வாலயத்திற்கு நாள்வழி பாட்டிற்கும் ஆண்டுவிழாவிற்கும் தேவதான இறையிலியாகப் பல ஊர்கள் இவ்வரசனால் அளிக்கப்பெற்றுள்ளன. சிவபெருமான் ஒருநாள் இவ்வரசன் கனவில் தோன்றி வடகாசியிலுள்ள தம் திருக்கோயில் அழிவுற்ற நிலையிலிருத்தல் பற்றிச் சித்திரா நதியின் வடகரையில் தென்காசியும் அதில் ஓர் ஆலயமும் அமைக்குமாறு கூறியருளியதே, தனை இவன் கட்டு வித்தமைக்குக் காரணமாகும். இச் செய்தி, தென்காசிக் கோயிற் கோபுரத்தின் முன்னர் நிற்கும் ஒரு கற்றூணில் வரையப் பட்டுள்ளது.* இக் கோயிலின் திருப்பணி முடிவு பெறுதற்குப் பதினேழாண்டுகள் ஆயின என்பது அக் கல்வெட்டால் தெரிகிறது. ஆனால் இவன் தொடங்கிய ஒன்பது நிலைக் கோபுரத் திருப்பணி மாத்திரம் இவனாட்சியில் முடிவெய்த வில்லை. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன்பால் இவன் கொண்டிருந்த பக்தி அளவிட்டு உரைக்கத்தக்கதன்று. எத்தகைய குறைகளுமின்றி இக்கோயிலைப் பாதுகாத்து வருமாறு சிவனடியார்களையும் தன் வழித்தோன்றல்களையும் இம்மன்னன் வேண்டிக்கொண்டிருப்பது குறிப்பிடற்பால தாகும். அவ்வேண்டுகோளும் சில செந்தமிழ்ப் பாடல்களாக உள்ளது. கன்னெஞ்சமுடை யாரையும் உருக்கும் இயல்புடையனவும், எந்நிலையிைைரயும் பிணிக்குந் தன்மை வாய்ந்தனவும் ஆகிய அப்பாடல்கள் இவ்வரசன் இயற்றியனவே யாகும். அவற்றைத் தென்காசிக் கோயிற் கோபுரத்தில் இன்றும் காணலாம்.

1. Travancore Archaeological Series, Vol. I. pp. 91, 92, 93 and 101.

2. T. A. S., Vol. I, pp. 99 and 100.

3 1. மனத்தால் வகுக்கவு மெட்டாத கோயில் வகுக்க முன்னின்

·

றெனைத்தான் பணிகொண்ட நாதன்றென் காசியை யென்றுமண்மேல்

நினைத்தா தரஞ்செய்து தங்காவல் பூண்ட நிருபர்பதந்

தனைத்தாழ்ந் திறைஞ்சித் தலைமீ தியானுந் தரித்தனனே.

2. ஆரா யினுமிந்தத் தென்காசி மேவும்பொன் னாலயத்து வாராத தோர்குற்றம் வந்தாலப் போதங்கு வந்ததனை

நேராக வேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன்

பாரா ரறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே