உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்

125

இவன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் புதல்வன்; கி. பி. 1473 முதல் 1506 வரையில் அரசு செலுத்தியவன். இவன் காலத்தில் பராக்கிரம பாண்டியனான குலசேகர தேவன் என்ற வேறொரு மன்னன் இருந்தனன் என்பது கல்வெட்டுக்களாற் புலப்படுகின்றது. அவன் கல்வெட்டுக்கள் கி. பி. 1479 முதல் 1499 வரையில் உள்ளன. அவன் யாவன் என்பது தெரியவில்லை. இனி, அபிராம பராக்கிரம பாண்டியன், ஆகவராமன் என்ற உடன் பிறப்பினர் இருவர் இருந்தமை, புதுக்கோட்டைச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது.' இவர்களைப் பற்றிய செய்திகள் கிைைடத்தில.

சடையவர்மன் சீவல்லப பாண்டியன்

4

5

.

இவன் ஆகவராமன் புதல்வன்; கி. பி. 1534 முதல் 1543 வரையில் அரசாண்டவன். இவனுக்கு ‘இறந்தகால மெடுத்தவன்’ 3‘பாண்டியராச்சிய தாபனாசாரியன்' என்ற பட்டங்களுமுண்டு. இவன் காலத்தில் திருவாங்கூர் இராச்சியத்திலிருந்த உதய மார்த்தாண்டவர்மன் என்ற சேரமன்னன் ஒருவன், தென் பாண்டி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். அச்சேரன் கல்வெட்டுக்கள் பிரமதேசம், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு ஆகிய ஊர்களில் உள்ளன. ஆகவே, இப்பகுதி அவனது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பது திண்ணம். தன் நாட்டை இழந்த சீவல்லபபாண்டியன், விசயநகரவேந்தனாகிய அச்சுததேவராயனிடம் முறையிடவே, அவனும் பெரும் படையோடு தென்னாட்டிற்கு வந்து உதயமார்த்தாண்ட வர்மனைப் போரில் வென்று அவன் கைப்பற்றியிருந்த தென் பாண்டிநாட்டைப் பிடுங்கிப் பாண்டியர்க்குக் கொடுத்தனன்.6 விசயநகரவேந்தன் இங்ஙனம் விரைந்து செய்தமைக்கு 1. Ibid, p.60.

2. Ibid, p. 83.

3. Travancore Archaeological Series, Vol. I, page 47.

4. Ibid, p. 54.

5. Ibid,55.

6. Ibid.