உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

131

எனவும் வரும் புறப்பாட்டடிகளாலும் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்னும் தொடர்மொழி யாலுமறியலாம். பிற்காலங்களில் சில நாடுகள் கூற்றங்கள் என்ற பெயரோடு வழங்கப்பெற்று வந்தன என்பது ஈண்டு உணரற் பாலது. ஒல்லையூர் நாடு கி.பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண் டுகளில் ஒல்லையூர்க் கூற்றம் என்று வழங்கப்பெற்று வந்தமை இதற்கோர் எடுத்துக்காட்டாகும். இச்செய்தி மேலே காட்டி யுள்ள 242 ஆம் புறப்பாட்டாலும், புதுக்கோட்டை நாட்டி லுள்ள கல்வெட்டுக்களாலும் உறுதியெய்துகின்றது.'

-

இரணியமுட்ட நாடு, புறப்பறளை நாடு, பாகனூர்க் கூற்றம், களக்குடி நாடு, தென் பறம்பு நாடு, வட பறம்பு நாடு, பொங்கலூர் நாடு, தென்கல்லக நாடு, செவ்விருக்கை நாடு, பூங்குடிநாடு,தும்பூர்க்கூற்றம், கீரனூர் நாடு, களாந்திருக்கை நாடு, அளநாடு, துறையூர்நாடு, வெண்பைக்குடி நாடு, நெச்சுர நாடு, சூரன்குடி நாடு, ஆசூர் நாடு, ஆண்மா நாடு, கீழ்க்களக் கூற்றம், கீழ்வேம்ப நாடு, மேல்வேம்ப நாடு, தென்வாரி நாடு, வட வாரி நாடு, குறுமாறை நாடு, குறுமலை நாடு, முள்ளி நாடு, திருவழுதிநாடு, முரப்பு நாடு, தென்களவழி நாடு, வானவன் நாடு, குட நாடு, ஆரிநாடு, திருமல்லி நாடு, கருநிலக்குடி நாடு, கானப்பேர்க்கூற்றம், அடலையூர் நாடு, திருமலை நாடு, கொழுவூர்க்கூற்றம், தாழையூர் நாடு, முத்தூர்க் கூற்றம், கீழ்ச்செம்பி நாடு, செம்பி நாடு, வடதலைச்செம்பி நாடு, வெண்புல நாடு, பருத்திக்குடி நாடு, புறமலை நாடு, துருமா நாடு, மிழலைக் கூற்றம், இடைக்குள நாடு, கோட்டூர் நாடு என்பன முற்காலத்தில் பாண்டி மண்டலத்திலிருந்த உள் நாடுகள் ஆகும்.

சில நாடுகளையும் கூற்றங்களையும் தன்னகத்துக் கொண்டு விளங்கிய பெருநிலப்பரப்பு வளநாடு என்று வழங்கப்பட்டு வந்தது. இத்தகைய வளநாடுகள் பாண்டி மண்டலத்தில் கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றண்டுகளிலும் பிற்காலங்களிலும் இருந்தன என்று தெரிகிறது. அவை,

1. இரணியமுட்ட நாட்டிலுள்ள பெருங்குன்றூர் என்பது, இதன் பொருளாகும். 2. Inscritions of the pudukkottai State, Nos. 382,386,387 & 399.

3. Epigraphia Indica, Vol.XXX,Ins. No.17.

3