உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-3 காலத்தையும் பொருளையும் பற்றி பல்வேறு வரலாறுகள் இருக்கக் கூடியனவே.

"வரலாற்றாசிரியன் பட்டறிவு, பற்பல விஷயங்களைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டம் ஆகியவற்றால் உருவான அவனுடைய மனம்தான் அவன் எப்படி வரலாற்றை எழுதுகிறான் என்பதை நிர்ணயிக்கிறது; விருப்பு வெறுப்பற்ற வரலாற்றாசிரியன் முயற்கொம்புதான். எனவே எந்த வரலாற்று நூலும் முழுமையான அப்பட்டமான உண்மையைக் கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் நிர்ணயித்து விட்டதாக எண்ணி விடக்கூடாது.

66

-

காரி பெக்மான்.

"வருங்காலத்தில் என்ன நடக்கும் எனக் கூறத் தேவையான அறிவை விட பண்டு என்ன நடந்திருக்கும் என உன்னிக்கத் தேவையான அறிவு மிக நுட்பமானது

""

-

அனதோல் பிரான்சு.

"வரலாற்றாசிரியன் அல்லது அவனைப் பயன்படுத்துபவர்கள் உள்ளத்தில் வெளிப்படையாகவோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனத்திலோ, உள்ள குறிக்கோள்களுடன் தான் வரலாறு எழுதப் படுகிறது. அக்குறிக்கோள்கள் பிற இனங்களை, குழுக்களைக் கட்டுப் படுத்துதலும் வசப்படுத்துதலும்; சமுதாயத்திற்கு இலக்குகளைக் காட்டி ஊக்குவித்தல்; குழுக்கள், வர்க்கங்களுக்கு உணர்ச்சியூட்டுதல்; அதிகாரத்தை ஏற்கெனவே கையிற் கொண்டுள்ளவர்களுக்கு வலுவூட்டுதல்; அதிகார மில்லாதவர்களிடையேயும், ஒடுக்கப்பட்டவரிடையேயும் இப்பொழுதுள்ள நிலைமையே சரி என்னும் பொந்திகை மனநிலையை ஏற்படுத்துதல் போன்றனவாம்.'

66

ஜே.எச்.பிளம்ப்

வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை; மீதி விருப்பு வெறுப்பின்படியான கூற்று"

வில் & ஏரியல் டுரான்ட்

“வரலாறு எழுதும் நாம் நம்காலத்தவர் சார்பில் மாந்த இனத்தின் முந்தைய நடவடிக்கைகளைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம். வரலாற்றாய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு பொழுது போக்குபவர் முந்தை வரலாற்று நடவடிக்கைகளைக் குறித்து இது அறிவுடையது, அது மூடத்தனமானது; து மதுகையுடையது, அது கோழைத்தனம்; ச்செயல் நன்று, அச்செயல் தீது; என்றவாறு மதிப்பிட்டுக் கூறும் பொறுப்பைத் தட்டிக் கழித்தல் ஒல்லாது. காயடித்த வரலாற்றாசிரியன் நமக்குத் தேவையில்லை.' ஆர்.ஜி.காலிங்வுட்

99