உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xiv

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-3

உழைப்பால் சிலபல விஷயங்களில் புதிய கருத்தோட்டங்கள் உருவாகியுள்ளன என்பதை வரலாற்று மாணவரும் இந்நூலைப் பயிலும் ஏனையோரும் உணர்தல் வேண்டும். அப்புதிய கருத்தோட்டங்களைத் தரும் நூல்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது (வசதி கருதி 1960க்கு முன்னர் வெளிவந்தாலும், என்றும் இத்துறையில் அறிய வேண்டிய நூல்களாக உள்ள, நூல்களும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன) அண்மைக்கால ஆய்வாளர்களின் சில புதிய பார்வைகளும் அவற்றை மேற்கொண்டவர்களும் வருமாறு:

(i) பர்டன் ஸ்டெய்ன்: நீலகண்ட சாத்திரியார் சொன்னபடி பிற்காலச் சோழர் ஆட்சிமுறை, பைசாந்தியப் பேரரசு Byzantine Emire போல சர்வ வல்லமை பெற்ற ஆட்சியன்று. பல்கூறுகளாக அதிகாரம் பிளவுண்டு நிலவிய அரசு segmentary state தான் அது. தென்னிந்தியாவில் இடைக்கால அரசுகள் - பிற்காலச் சோழர்உட்பட தம் கீழ் உள்ள பகுதிகளைக் கண்காணித்து தம் கட்டுக்குள் வைத்திருந்தவையே; அப்பகுதிகளை நேரடியாக நிருவகித்தவை அல்ல. அவை கப்பம் பெற்று வந்தவை; வரி வசூலைக் கொண்டு நடந்தவை அல்ல; பேரரசில் அடங்கிய பல்வேறு வகைச் சமூகங்களும் பெருமளவுக்கு ஊரார், நாட்டார், பிரமதேயத்தார், கோயில் நிருவாகத்தார், வணிகர் அமைப்புகள் போன்ற தனித்தனி அமைப்புகளாகவே செயல்பட்டன.

"The South Indian medieval states were custodial rather than managerial, tribute - receiving, rather than tax-based; and the society itself was organised into relatively isolated, locally oriented networks of relations among corporate groups and associations.

(ii) நொபுரு கராசிமா, ஒய்.சுப்பராயலு, பி.சண்முகம்

இவர்கள் ஆய்வின் முடிவு ஸ்டெய்ன் கருத்து ஆதாரமற்றது என்பதாகும். பிற்காலச் சோழச் சோழர் ஆட்சியில் (குறிப்பாக சோழர் பூர்வீக ஆட்சிப்பகுதியிலும் அதையொட்டிய பகுதிகளிலும்) பல துறைகளிலும் நேரடியாக முழு அதிகாரம் செலுத்திய ஆட்சிமுறை (Centralized Adminis- tration) இருந்திருக்கத்தான் வேண்டும். பிற்காலச் சோழர் ஆட்சி" முழு அதிகார அரசின் தொடக்கநிலை” Early State என்பார். (பிற்காலச் சோழர் ஆட்சிமுறையைப் பற்றிய பல்வேறு கருத்தோட்டங்களைச் சுருக்கமாக, தெளிவாக பி.சண்முகம், தமிழ்நாட்டு அரசு வரலாற்றுக் குழு 1998இல் வெளி யிட்ட நூலின் முதல் தொகுதி பக்கங்கள் 405-475இல் தந்துள்ளார்)

என்பர்.

(iii) கைலாசபதி, கேசவன், எம்.ஜி.எஸ். நாராயணன் இவர்கள் பிற்காலச் சோழ அரசு நிலமானிய அரசு (Feudal State)