உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




240

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி

ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும் நித்தில நெடுங்கடை லுத்தர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத் துங்க வர்ம னாகிய கடராத் தரசனை வாகையும் பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும் ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர் புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும் நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வண்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும் கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும் தீதமர் பல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிர் கடுந்திற லிலாமுரி தேசமும் தேனக்க வார்பொழில் மானக்க வாரமும்

தொடுகடற் காவற் கரடுமுரட் கடாரமும்

மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு.

இராசாதி ராச சோழன்

திங்களேர் தருதன் றொங்கல்வெண் குடைக்கீழ்

நிலமக ணிலவ மலர்மகட் புணர்ந்து

செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து

தன்சிறிய தாதை யுந்திருத் தமையனுங்

குறிகொடன் னிளங்கோக் கிளையு நெறியுணர்

தன்றிருப் புதல்வர் தம்மையுந் துன்றெழில்