உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

1

165

வட திருவாலங்காட்டிலுள்ள குலோத்துங்கனது முப்பத்தி ரண்டாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று, இப்புலவர் பெருந்தகையைப் 'பாரதந் தன்னை அருந் தமிழ்ப்படுத்துச் சிவநெறி கண்டவர்'என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. இவர் குலோத்துங்கனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவர் என்பதும் தொண்டை நாட்டிலுள்ள அரும்பாக்கம் என்ற ஊரினர் என்பதும் நன்கு புலனாகின்றன. இவர் இயற்றிய மகாபாரதம் காலத்தில் கிடைக்காமையின் அழிந்துவிட்டது போலும்.

க்

தமிழிலக்கணப் பயிற்சி பெற விரும்புவோர் யாவரும் முதலில் கற்கத் தொடங்கும் நன்னூல் என்ற இலக்கண நூலை இயற்றிய பவணந்தி முனிவர் என்பார் இவ் வேந்தன் காலத்தில் நிலவிய புலவர் ஆவர். நம் குலோத்துங்கனுக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு கங்க நாட்டில் அரசாண்ட அமராபரண சீயகங்கன்' என்ற குறுநில மன்னன் ஒருவன் வேண்டிக் கொண்ட வாறு இம்முனிவர் நன்னூல் இயற்றினர் என்பது அந்நூற் சிறப்புப் பாயிரத்தால் வெளியாகின்றது. இவர் மைசூர் ஜில்லாவில் திருமுக்கூடல் நரசிபுரந் தாலுகாவிலுள்ள சநநாதபுரத்திலிருந்த ஒரு சமண முனிவர் ஆவர். சோழ மன்னர்களின் ஆளுகைக்குட் பட்டிருந்த கங்க நாட்டுச் சிற்றரசர்கள் தமிழ் வளர்ச்சியிலும் ஈடுபட்டுத் தக்க புலவர்களை ஆதரித்து அரிய நூல்கள் இயற்றுவித்தமைக்கு இஃது ஓர் எடுத்துக்காட்டாகும்.

இனி, சைவ சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் இவன்தன் ஆட்சியின் தொடக்கத்தில் நிகழ்த்திய அரும் பெருந்தொண்டு அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகளைக் கொண்டு பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணம் பாடுவித்தமையேயாம். தொண்டை நாட்டில் புலியூர்க் கோட்டத்திலுள்ள குன்றத்தூரில் தோன்றிய இக் கவிஞர் பெருமான், குலோத்துங்கனுக்கு அமைச்ச ராயமர்ந்து உத்தம

1. Ins. 482 of 1905.

2.

S.I.I., Vol. III, No. 62; திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித் தலையுங் கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 27 ஆவது..... காஞ்சிபுரத்து உடையார் திருவேகம்பமுடையார்க்கு ஸ்ரீமத் குவளாலபுர பரமேஸ்வரன் கங்க குலோற்பவன் சீயகங்கன் அமராபரணனான திருவேகம்பமுடையானேன் வைத்த திருநுந்தா விளக்கு 1-க்குப் பசு 302 ரிஷபம் 1, (S.I.I., Vol. VI, No. 823)