உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

பிற்குலப் பிறைபோல் நிற்பிழை யென்னுஞ் சொல்லெதிர் கோடிற் றல்லது தன்கை வில்லது கோடா வேள்குலத் தரசர் அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும் பட்டவெம் பரியும் விட்டதன் மானமும் கூறின வீரமும் கிடப்ப வேறின மலைகளு முதுகு நெளிப்ப விழிந்த நதிகளுஞ் சுழன்றுடைந் தோட விழுந்த

கடல்களுந் தலைவிரித் தலமரக் குடதிசைத் தந்நா ளுகந்து தானும் தானையும் பன்னா ளிட்ட பலபல முதுகும்

பயந்தெதிர் மாறிய சயப்பெருந் திருவும் பழியிகந்து கொடுத்த புகழின் செல்வியும் வாளா ரொண்கண் மடந்தைய ரீட்டமும் மீளாது கொடுத்த வெங்கரி நிரையும் கங்கமண் டலமும் சிங்கண மென்னும் பாணி யிரண்டு மொருவிசைக் கைக்கொண் டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங் கொள்ளத் திருவுளத் தடைத்து வெள்ளம் வருபரித் தரங்கமும் பொருபரிக் கலங்களும் தந்திர வாரியு முடைத்தாய் வந்து வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்

ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி

வெரிநளித் தோடி யரணெனப் புக்க காடறத் துடைத்து நாட்டிப் படுத்து மற்றவர் தம்மை வனசரர் திரியும் பொற்றை வெஞ்சுர மேற்றிக் கொற்ற விசயத் தம்பந் திசைதொறு நிறுத்தி முத்தின் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலு

மத்திவெங் கரிபடு மய்யச் சையமும்

கன்னியுங் கைக்கொண் டருளித் தென்னாட் டெல்லை காட்டிக் கடன்மலை நாட்டுள சாவே றெல்லாந் தனிவிசும் பேற

மாவே றியதன் வரூதினித் தலைவரைக்

219