உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

33

என்ற வேந்தன் ஒருவன் ஜாவாவிலுள்ள ஒரு குன்றின் உச்சியில் சிவாலயம் ஒன்று உலகிற்கு நலமுண்டாகுமாறு கட்டினான் என்று அந்நாட்டிற் காணப்படும் ஒரு கல்வெட்டு உணர்த்து கின்றது. ஜாவாவில் ஏற்பட்ட சிவவழிபாடு குஞ்சர குஞ்ச நாட்டிலிருந்து வந்தது என்று அக்கல்வெட்டு அறிவிக்கின்றது. குஞ்சரகுஞ்சநாடு என்பது பாண்டிநாடு என்றும் அந்நாட்டி லிருந்த அகத்திய முனிவரே ஜாவாவில் சிவவழிபாட்டையுண்டு பண்ணியவர் என்றும் பிறகு அந்நாட்டரசர்கள், சிவன் கோயில்கள் கட்டத் தொடங்கினர் என்றும் கி.பி. 760- ல் ஜாவாவில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த ஒரு அரசன் அகத்தியருக்குக் கோயில் ஒன்று கட்டி அதில் இம்முனிவருடைய கருங் கற்படிமத்தை எழுந்தருளுவித்தான் என்று உணர்த்துவதோடு அங்கு இவரது மரப்படிமம் ஒன்று முன்னர் இருந்ததென்றும் கூறுகின்றது. ஆகவே ஜாவாவில் சிவன் கோயில்களும் அகத்தியர் கோயில்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்தன என்பதும், அவற்றை அந்நாட்டு வேந்தர்கள் பெரிதும் போற்றி வந்தனர் என்பதும் கல்வெட்டுகளால் நன்கு வெளியாகின்றன. கி.பி.889-ல் காம்போச நாட்டில் வரையப் பெற்ற கல்வெட் டொன்று அந்நாட்டு மன்னர்களின் முன்னோருள்அகத்தியர் ஒருவர் என்றும் இவர் கம்போச மன்னனுடைய மகள் யசோமதியை மணந்தனர் என்றும் இவ்விருவருக்கும் பிறந்த புதல்வனே நரேந்திரவர்மன் என்ற அரசகுமாரன் என்றும் கூறுகின்றன. அந்நாட்டிலுள்ள மற்றொரு கல்வெட்டு அந்நாட்டைப் பல வகையாலும், சீர்திருத்தி உயர்நிலைக்குக் கொணர்ந்தவர் அகத்தியரே என்றும் இவர் அங்கு இரண்டு சிவன்கோயில்கள் கட்டுவித்தார் என்றும் இவர்தம் மாணாக்கரை அந்நாட்டிற்குக் குருவாக அமர்த்தி விட்டு அதனைவிட்டுப் புறப்பட்டார் என்றும் உணர்த்துகின்றது. இங்ஙனமே இந்துசீனம், மலேயா என்ற நாடுகளிலும் அகத்தியர் சிவவழிப்பாட்டை ஏற்படுத்தியதோடு அந்நாடுகளை நாகரிக நிலையில் அமையச் செய்தனர் என்றும் தெரிகிறது. எனவே, பாண்டிநாட்டிலிருந்து புறப்பட்டுக் கடலைக் கடந்து கிழக்கே சென்று ஜாவா, காம்போசம், இந்துசீனம், மலேயா ஆகிய நாடுகளில் தங்கிப் பல சீர்திருத்தங்கள் செய்து, அந்நாடுகளை