உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


13. தொண்டைமான் சாசனம்

இதன் மேல் செல்லாநின்ற நந்தனநாம (ர) த்து உத்தராயணத் துவில் மாகமாசத்து பூருவபட்சத்தில் சுக்கிரவாரமும் சத்தமியும் ரோகணி நட்சத்திரமும் சுபயோக சுபகரணமும் பெற்ற புண்ணிய தினத்தில் மண் மகாமண்டலேசுரன், அரியராயிரதன் விபாடன் பாஷைக்குத் தப்புவராயிர கண்டன் முவாயிரகண்டன் கண்டனாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பூருவ தெட்சிண பச்சி மோத்தர திக்கு விசயஞ் செய்து எம்மண்டலமும் திறை கொண்டருளிய ராசாதிராஜன் துருக்கர் தளவிபாடன் துருக்கர் மோகந் தவிழ்த்தான் ஒட்டியர் தளவிபாடன் ஒட்டியர்மோகந்த விழ்த்தான் பாண்டிமண்டலத் தாபனாச்சாரியன் சோழ மண்டல பிரதிட்டாசாரியன், தொண்டைமண்டல துரந்தராதிபன் கீர்த்திப் பிரதாபன் வீரப் பிரதாபன் புவனேகரவீரன் சிவபூசாதுரந்தரன் சிவகாரியா துரந்தரன் வடவெள்ளாறு சுந்தரபாண்டிய வள நாட்டு இளங் கோனாட்டு அறந்தாங்கி அரசு அச்சமறியாதான் ஆட்டுக்கு ஆணை வழங்கு மதுளன் சேரன்பாட செந்தமிழ்ப் புனைந்த புங்கவன் கருது மாசாகா கமலசந்திரன் கொற்றக் குடையும் தவண்டையு முள்ள குணசீலன் தன்னையடைந் தாரை தானாக காக்கும் பிராமன் நடைகற்ற போதொருடை கற்றதீரன் ஏழுநாழிகையில் ஈழந்திறை கொண்ட பெருமாள் புற்றுமாத்தியும் பொந்தாலும் போகே னென்று வென்ற புரந்தரன் தலைமலைகண்டான் பிணமலை கண்டான் முகவின் கிழத்தியு மிளவன்னியமிசுர கண்டன் திருமிழலைத் திருநாடன் மல்லை யாபதி மயிலையாதி பதி அவ்வைக்கனி கொண்டவன் செயனை வென்றவன் பட்டனுக்கு முதுகு சாய்த்தான் மரைபுக்கார் காவலன் அடியார் வேலைக் காரன் காஞ்சிபுராதீஸ்வரன் ஆளுடைய தம்பிரானார் துஅவுடைய றெகுநாத வணங்காமுடி தொண்டைமானாரவர்கள் புத்திரன் அருணாசலவணங்காமுடி