உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டுங்
கானில்லால் நுளம்புங் கருடனா தலினே” :-என்பதாம்.

சிவபெருமானுக்குத் தசாங்கம் கூறவந்த அடிகள், ‘பொய்நீர் விரையாக்கலியெனும் ஆணையும்’, என்று தீஞ்சுவையொழுகும் அவ்வாசிரியப்பாவில் அவ்விறைவனது ஆணையின் திருப் பெயரைக் குறித்திருப்பது அறிந்து கொள்ளுதற்குரியதாகும்.

இனி, திருப்புறம்பியத்திலுள்ள திருக்கோயிலிலிருந்து யாம் எழுதிவந்த அக்கல்வெட்டுக்கள் மூன்றும் சரித ஆராய்ச்சியாளர் களுக்குப் பெரிதும் பயன்படுமாதலின் அவற்றை அடியில் வரைகின்றேன்.

1. முதல் இராசராசசோழன் காலத்தியது

(1) ஸ்வஸ்திஸ்ரீ கோ ராஜராஜகேசரி வன்மற்கு யாண்டு ஆவது ஸ்ரீதிருப்புறம்பியமுடைய மகாதேவர்க்குத் திரு

(2) மஞ்சன நீராடியருள ஸ்ரீகண்டன் மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழ தேவர்க்காக இ(த்) தேவரை

(3) த் திருவயிறு வா(ய்)த்த உடைய பிராட்டியார் தந்த வெள்ளிக் கலசம் ஒன்று அலகுநிலை தூற்று நாற்பத்துமு

(4) க் கழஞ்சே முக்காலே இரண்டு மஞ்சாடி, இதுக்கு விரையாக் கலி யென்னுந் நிறைகோலால் நிறை

(5) பதின்மூன்றெழுக்கை ஒரு பலம் பதின்கழஞ்சே காலாக இவ்வூர்க் கல்லால் விற்ற

(6) நிறை நூற்றுநாற் பதின்கழஞ்சே முக்காலே மூன்று மஞ்சாடியும் அறுமா இவைபன்

(7) மாகேஸ்வர ரக்ஷை.

2. கங்கைகொண்ட சோழன் காலத்தியது

ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னிவள ரிருநில மடந்தையும்
போர்செயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருந் தேவிய ராகி இன்புற