உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


என்பவனும் ஒருவன் ஆவன். சரித ஆராய்ச்சியாளர்கள் அவனை மூன்றாம் நந்திவர்மன் என்பர். அவன் கி.பி. 830 முதல் 854 வரை அரசாண்டவன். தற்காலத்தில் வெளிவந்துள்ள பாரதவெண்பா அவ்வேந்தன் காலத்தில் எழுதப் பெற்றதாகும். அதன் ஆசிரியர் பாயிரத்தில் அவனைப் புகழ்ந்து ஒரு வெண்பா கூறியிருத்தலோடு ‘பல்லவர் கோமான் பண்டிதராலயன்‘ என்னும் உரை நடையில் அவனைப் பாராட்டியுள்ளனர். சிறந்த செந்தமிழ்ப் புலமையும் ஒப்பற்ற சிவபத்தியும் வாய்ந்த அவ்வேந்தன் புலவர் பெருமக்கள் பால் பேரன்பு பூண்டு அன்னோரைப் பெரிதும் ஆதரித்து வந்தான். அவன் காலத்தில் நிலவிய புலவர் பெருமான் ஒருவர் அவன் மீது ஒரு கலம்பகம் பாடியுள்ளார். அது நந்திக் கலம்பகம் எனப்படும் கலம்பகங்களுள் மிகவும் பழமை வாய்ந்தது அதுவேயாகும். அந்நூல் அவ்வேந்தனை ‘அவனி நாராயணன்‘ எனவும், ‘மல்லை வேந்தன்‘ எனவும், ‘மயிலை காவலன்‘ எனவும், ‘விடேல் விடுகு‘ எனவும் புகழ்ந்து கூறுகின்றது. அவற்றுள், விடேல் விடுகு என்னும் சொற் றொடர் மூன்று பாடல்களில் வந்துள்ளது. அப்பாடல்களுள் ஒன்று,

‘நெஞ்சா குலமுற்றிஙனே மெலிய நிலவின்கதிர் நிளெரியாய் விரியத்
துஞ்சா நயனத்தொடு சோருமிவட் கருளா தொழிகின்றது தொண்டைகொலோ
செஞ்சாலி வயற்படர் காவிரிசூழ் திருநாடுடை நந்திசினக்கலியின்
வெஞ்சாயன் மறைத்த தனிக்குடையான் விடை மண் பொறி யோலை விடேல்விடுகே‘

                    (நந்திக்கலம்பகம், பா.11)

என்பது, ஈண்டு விடேல் விடுகு என்பது நந்திவர்மனை யுணர்த்துதல் அறியத்தக்கது. அன்றியும், ‘வினைவார்கழல் நந்தி விடேல் விடுகு‘ என்பதும், ‘விண்டொடு திண்கிரியளவும் வீரஞ் செல்லும் விடேல் விடுகு‘ என்பதும் பல்லவ வேந்தனாகிய நந்திவர்மனையே குறித்தல் காண்க. அவ்வேந்தனது தந்தையாகிய தந்திவர்மனது ஆட்சிக்காலத்தில் குவாவன் சாத்தன் என்ற தலைவன் ஒருவன் விடேல் விடுகு முத்தரையன் என்னும் பட்டத்துடன் புதுக்கோட்டை நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியில்