உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


ஈ. இலக்கிய ஆய்வு

23. திருவிளையாடற்புராணம்
64-வது படல ஆராய்ச்சி

பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்தருளிய, திருவிளையாடற் புராணம் 64-வது படலத்தில், திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்புறம் பயத்தின்கண் ஒரு வணிகமாதின் துயரொழிக்கும் வண்ணம் அரவாலிறந்த வணிகனுக்கு ஆருயிர் வழங்கி, அவ்விருவரையும் மணம்புணரும்படி செய்தருளினார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், திருஞானசம்பந்த சுவாமிகள் திருமருகலில் அங்ஙனம் செய்தருளியதாகத் திருத்தொண்டர் புராணத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்விரு சரிதங்களையும் சென்ற 19-ம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்த சில சுதேசவிற்பன்னர்கள், திருவிளையாடற் புராண முடையார் கூறுவது சரித்திர ஆராய்ச்சியிற் சிறிதும் நம்பத்தக்க உண்மையாக மாட்டாதென்றும், திருத்தொண்டர் புராணத்திற் சொல்லப்பட்டிருப்பதே உண்மையாகவிருக்க வேண்டு மென்றும், மேற்கூறிய இருபுராணங்களிலும் சொல்லப்படும் சரித்திரங்களிரண்டும் ஒரே சரித்திரமாகத் தானிருக்க வேண்டு மென்றும் தத்தமக்குத் தோன்றியவாறு கூறிப் போந்தனர். இதனை, ஆராயப்புகு முன்னர் அவ்விருபுராணங் களிலும் கூறப்படும் சரித்திரங்களைச் சுருக்கமாய் அடியில் வரைகின்றேன்.

திருத்தொண்டர் புராணத்தில், (திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணத்தில்) சொல்லப்பட்டிருக்கும் சரித்திரமாவது :- வைப்பூரின்கண் ஏழுபுதல்விகளையுடைய தாமன் என்னும் ஒருவணிகன், தனது மருமகனுக்கு மூத்த குமாரத்தியை விவாகஞ் செய்து கொடுப்பதாய் வாக்களித்துப் பிறகு வேறொருவனிடம்