உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

147


இனி ஆலவா யெம்பெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்களையும் செய்தருளியபின்னரே நம்மாசிரியர் இந்நூலியற்றியுள்ளா ரென்பது, ”எட்டெட்டியற்றிய கட்டமர் சடையோன்” என்னுங் கல்லாடச் செய்யுளடியால் அறியப்படும். அறுபத்திரண்டு அறுபத்து மூன்றாவது திருவிளையாடல்கள், திருஞானசம்பந்த சுவாமிகள் கூன்பாண்டியற்குச் சுரந்தீர்த்ததையும் சமணரைக் கழுவேற்றியதையும் பற்றியனவாகலின், இந்நூலுடையார், கடைச்சங்ககாலத்திற்குப் பிந்தியவராகிய திருஞானசம்பந்த சுவாமிகட்குப் பிற்பட்டவராத லுணர்ந்துகொள்க. அன்றியும்,

“பரிபுரக்கம்பலை விருசெவியுண்ணுங்
குடக்கோச்சேரன் கிடைத்திதுகாண்கென மதிமலிபுரிசைத் திருமுகங்கூறி
யன்புருத்தரித்த வின்பிசைப்பாணன் பெறநிதிகொடுக்கென வுறவிடுத்தருளிய மாதவர்வழுத்துங் கூடற்கிறைவன்”

என்னும் செய்யுளடிகளில் கூடல்நாயகன் தமது அன்பனாகிய பாணபத்திரர்க்குப் பொருளளிக்கும் வண்ணம் சேரமாற்கு, 'மதிமலிபுரிசை மாடக்கூடல்' என்னுந் திருமுகப்பாசுரம் விடுத்தருளியதைக் கல்லாடமுடையார் கூறியிருக்கின்றனர்.

சேரநாட்டில் திருவஞ்சைக்களத்திற்கருகிலுள்ள கொடுங்கோளூரிலிருந்து ஆட்சிபுரிந்தவரும், சைவசமயாசாரியாராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகட்குப் பெருநட்பினரும், அவர்களுடன் திருக்கைலாயஞ் சென்று ஆங்குச் சிவபெருமான் றிருமுன்னர்த் தாமியற்றிய திருக்கைலாய ஞானவுலாவை யரங்கேற்றியவரும் ‘கழறிற்றறிவார்’ என்னுந் திருநாமத்துடன் சிவனடியார் அறுபத்து மூவரில் ஒருவராக விளங்குகின்றவரும் இச்சேரர் பெருமானே யென்பது திருத்தொண்டர் புராணத்திலுள்ள


தேறவும் பெறுமுதற்புதல்வர்க ளேழெழுபெயருங் கோதறப்பருகவும் எடுத்துப் பரப்பி”னரென்றும் உரைக்கின்றனர். அன்றியும் திருக்குறட்கு அப்பெருமான் சிறப்புக்க வியருளியதைக் குறிக்குங்கால், "வள்ளுவன் றனக்குவளர்க விப்புலவர் முன் முதற்கவிபாடிய” ருளினரென்றும் கூறுகின்றனர். இவற்றால் இவ்வாசிரியர் கடைச் சங்கப்புலவருள் ஒருவரல்ல ரென்பது நன்குதெளியப்படும். எங்ஙனமெனில், இவர் கடைச் சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராயிருப்பின், "மாறனும் புலவருமயங்குறு காலை யென்னாது, “எம்முன் என்றுங் கூறல்வேண்டும். இவர், அங்ஙனங் கூறாமையின், கடைச்சங்கப்புலவருள் ஒருவரல்லரென்பது இனிதுணரப்படும்.