உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

149


9-ஆம் நூற்றாண்டினிடையில் விளங்கியவராதல் வேண்டு மென்று ஸ்ரீமான் T.A.கோபி நாதராயவர்கள் M.A.செந்தமிழ் 3- ஆம் தொகுதி 9-ஆம் பகுதியில் நிரூபணஞ் செய்துள்ளனர். கடைச்சங்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய காலங்களிலும் நின்று நிலவியதாகலின், சுந்தரமூர்த்தி சுவாமிகள் கடைச்சங்க காலத்திற்குப் பன்னூற்றாண்டுகட்குப் பின்னரே விளங்கிய வராகற்பாலர். இனி, சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தினராய சேரமான் பெருமாணாயனார்க்கு ஆலவாயுறை யிறைவன் றிருமுகமனுப் பியருளிய செய்தியைத் தம் நூலிற் குறித்துப் போந்த கல்லாடனாரும் கடைச்சங்க காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்குப்பின்னரே இத்தமிழகத்தில் வாழ்ந்தவராவரென்பது இனிதுவிளங்கும்.

இதுகாறுங்கூறியவற்றால், கல்லாடமுடையார் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராய கல்லாடனாரல்லரென்பதும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே கல்லாடரென்னும் பெயர்பூண்டு விளங்கிய வேறொரு புலவரேயா மென்பதும் புலப்படுதல் காண்க.

இனி, நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய தொல்லுரையாசிரியர் பலரானும் அன்னோர் உரைகளில், இக்கல்லாடச் செய்யுட்கள் எடுத்தாளப் படவில்லை யாதலின், இந்நூலுடையார் மேற்கூறிய உரையாசிரியர்களின் காலத்திற்குப் பிற்பட்டவரென்றுகூறல் சாலப்பொருந்து


“வருவாசகத்தினின்முற்றுணர்ந்தோனைவண்டில்லைமன்னைத்
திருவாதவூர்ச்சிவபாத்தியன் செய்திருச்சிற்றம்பலப்
பொருளார்தருதிருக்கோவைகண்டேமற்றப்பொருளைத்
தெருளாதவுள்ளத்தவர்கவிபாடிச்சிரிப்பிப்பரே.”

என்னுஞ் செய்யுளால் இனிதுவிளங்கும். "பொய்யடிமையில்லாதபுலவர்" என்னுஞ் சொற் றொடர் மாணிக்கவாசகரைக்குறிக்குமாயின், அப்பெருமானை நன்கறிந்துள்ள நம்பி யாண்டார் தமது திருவந்தாதியில், அங்ஙனங்கூறிச் செல்லலாம்; அவர் அங்ஙனங் கூறாமையின், அச்சொற்றொடர் அப்பெரியாரையே குறிக்கு மென்றுரைத்தல் சிறிதும் பொருத்தமுடைத்தன்று. அன்றியும் சுந்தரமூர்த்திகட்கு மிகச் சமீபகாலத்து விளங்கிய நம்பியாண்டார்காலத்து அச்சொற்றொடர் சங்கப்புலவர்களைக்குறித்து வழங்கி வந்தமையால், அப்பெரியார் தமது திருவந்தாதியில் அங்ஙனங்கூறினாரென்க. ஆகவே, நம்மையரவர்கள் கூற்றுச் சிறிதும் பொருந்தாதென்க.

(கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் 58.)