உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201




35. அன்பைப் பற்றிய பாடல்கள்

(இப்பாடல்கள் கனம் பொருந்திய திவான் இராமையங்கார் அவர்கள் C.S.I. விரும்பியபடி, மனோன்மணீயம், திருஞான சம்பந்தர் காலம் முதலிய நூல்களின் ஆசிரியரான காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபஸர் சுந்தரம்பிள்ளை M.A. அவர்களால், ஸெயின்ட்பால் என்பவர் அன்பைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதியிருந்த பாடல்களின் கருத்தைத் தழுவி இயற்றப்பெற்றனவாம்; 1891-ஆம் வருஷத்து மார்ச்சு மாதத்திய ஜநவிநோதிநிப் பத்திரிகையில் வெளிவந்துள்ள இப்பாடல்களை நம் செந்தமிழ் நேயர்களும் படித்து மகிழுமாறு ஈண்டு வெளியிடுகின்றேன்.

கட்டளைக் கலித்துறை

பிறங்கும் பிறர்குறை பேணாது நற்குணம் பேணலுறும்
அறந்திகழ் நெஞ்சின ரன்றே லவர்விண் ணமிர்தினையும்
மறந்திடும் வண்ணம் வடித்துப் படிக்கின்ற வார்த்தையெல்லாம்
வெறுங்கல கல்லென்னும் வெங்கல வோசையின் வேறலவே. (1)

எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

வருபொரு ளுரைக்கும் வல்லபம் பெறிலென்
       மண்ணிடை விண்ணிடை மறைந்த
பெருரக சியங்கள் யாவையு முணரும்
       பெருமையும் ஞானமும் பெறிலென்
பருவத மெடுத்துப் பந்தென வாடும்
       பத்தியுஞ் சித்தியும் பெறிலென்
பரவனு கூல திருட்டியென் றுரைக்கும்
       பண்புறு மன்பிலை யெனிலே. (2)

இல்லவர் யாரும் புசித்துநற் சுகமே
       யெய்திடப் பொருளெலா மீந்தென்
நல்லமெய் தனையுஞ் சிபியெனத் தன்கோள்
       நாட்டிட நல்கியு மென்னை