உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


இனி, பாண்டுவின் மகனாகிய பார்த்தன்; தன்புத்திரன் போரிலுயிர் துறந்ததையறியானாய், பாசறைக்குத் திரும்பி வருங்கால், கண்ணபிரானை நோக்கி, “என்கணுந்தோளுமார்பு மிடனுறத் துடிக்கைமாறா னின்கணுமருவிசோரநின் றனை யின்று போரிற் - புன்கணுற்றவர்கண் மற்றென்றுணைவரோ புதல்வர் தாமோ“ என்று வினாவினான். இதனாற் கண் தோள் முதலியன இடத்திற்றுடித்தால் தீமையும் வலத்திற்றுடித்தால் நன்மையு முண்டாகு மென்பது அறியப்படுகிறது. ஆனால் இம்முடிபு முன்னர் வரைந்துள்ள முடிபுடன் பொருந்தாது முரணுகின்றதே யெனின், இம்முடிபு ஆண்பாலார்க்கும், முன்னர் வரைந்துள்ள முடிபு பெண்பாலார்க்கு முரித்தாகலின் உண்மையில் முரணா தென்க. இதனால் ஆண்பாலார்க்குக் கண் தோள் முதலியன இடத்திற்றுடித்தால் தீமையும் வலத்திற்றுடித்தால் நன்மையு முண்டாகு மென்பதும் பெண்பாலார்க்கு இடத் திற்றுடித்தால் நன்மையும் வலத்திற்றுடித்தால் தீமையு முண்டாகு மென்பதும் நன்குவிளங்கும்.

அன்றியும், காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா நடந்த நாளில் கோவலன் மனைவியாகிய கண்ணகிக்கு இடது கண்ணும் அவன் காதற்பரத்தையாகிய மாதவிக்கு வலது கண்ணும் துடித்தன வென்பதை,

சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்தகாதை 236 - 240,

’கண்ணகிகருங்கணுமாதவி செங்கணு
முண்ணிறைகரந்தகத் தொளித்துநீ ருகுத்தன வெண்ணுமுறையிடத் தினும்வலத் தினுந்துடித்தன விண்ணவர்கோமான்விழவு நாளகத்தென’

என்னும் செய்யுளடிகளில் ஆசிரியர் இளங்கோவடிகளும் கூறிப் போந்தனர். அங்ஙனந் துடித்ததனாற் கண்ணகிக்குண்டாகிய நன்மை யாவது தனது ஆருயிர் நாயகன் காதற்பரத்தையாகிய மாதவியை விட்டகன்று தன்பாலடைந்தமையே; மாதவிக் குண்டாகிய தீமையாவது கோவலன் தன்னட்பையொழித்து அகன்றமையே.