உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229




தொல்காப்பியப் பொதுப் பாயிரம்
மூலமும் உரையும்

முகவுரை

இப்பொதுப் பாயிரம் இயற்றியவர், ஆத்திரையர் பேராசிரியர் என்பார். இஃது ஆசிரியர் சிவஞான முனிவர் அருளிய ’தொல்காப்பியப் பாயிர விருத்தி’ யாலும், சங்கர நமச்சிவாயப் புலவர் அருளிய ’நன்னூல் விருத்தி’ யானும் இனிதுணரப்படும்; அன்றியும் இச்செய்தி தொல்காப்பிய மரபியலுரையிலும் அவ்வுரைசிரியரால் குறிக்கப் பெற்றுள்ளது.

இதுகாறும் ஆராய்ந்து கண்ட வளவில், தமிழ் நூற்களில் பேராசிரியர் எனக் குறிக்கப் பெற்றோர் மூவருளர். அவர்களுள் யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியராகிய குணசாகரனாரால், ’பிறை நெடுமுடிக் கறை மிடற்றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்’ எனவும், ’நீர் மலிந்த வார் சடையயோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர்’ எனவும், ’காமவேளைக் கறுத்த புத்தேள் நாமந்தங்கிய நல்லாசிரியர்’ எனவும், ’வடவேங்கடந் தென் குமரி என்னுஞ் சிறப்புப் பாயிரஞ் செய்தார் பனம்பாரனார் எனவும், வலம் புரிமுத்திற் குலம்புரி பிறப்பும். என்னும் பொதுப் பாயிரஞ்செய்தான் ஆத்திரையன் பேராசிரியன் எனவும் பாயிரம் செய்தார் பெயர் கூறியவாறு’ என்பது இவ்வுரைப் பகுதியில் சிறப்புப் பாயிரஞ் செய்தார் பனம்பாரனார் என இவ்வாசிரியரது இயற்பெயரோடு தலைமைச் சிறப்புணர்த்தும், ‘ஆர்’ விகுதியும், புணர்த்திக் கூறியுள்ள இவ்வுரையாசிரியர், பொதுப் பாயிரஞ்செய்தாரைக் குறிக்குங்கால் அங்ஙனம் ‘ஆர்’ விகுதி புணர்த்தாது ’பேராசிரியன்’ என்றே கூறியுள்ளனர்.

இதனை நுணுகி ஆராயின், இவ்வுரையாளர் தம்மையே அங்ஙனம் படர்க்கையில் வைத்துக் கூறியுள்ளனரோ வென்று கருதற்கிடந் தருகின்றது. அன்றியும், இப்பொதுப் பாயிரச்