உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233




தொல்காப்பியப் பொதுப் பாயிரம்
மூலமும் உரையும்

கடவுள் துணை

வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்
வான்யா றன்ன தூய்மையும், வான்யாறு
நிலம்படர்ந் தன்ன நலம்பட ரொழுக்கமுந்,
திங்க ளன்ன கல்வியுந், திங்களொடு
ஞாயி றன்ன வாய்மையும், யாவது
மஃகா வன்பும், வெஃகா வுள்ளமுந்,
துலைநா வன்ன சமநிலை யுளப்பட,
வெண்வகை யுறுப்பின ராகித் திண்ணிதின்
வேளாண் வாழ்க்கையுந், தாஅ ளாண்மையு,

10.முலகிய லறிதலு, நிலைஇய தோற்றமும்,

பொறையு நிறையும், பொச்சாப் பின்மையு
மறிவு முருவு மாற்றலும் புகழுஞ்
சொற்பொரு ளுணர்த்துஞ் சொல் வன்மையுங்
கற்போர் நெஞ்சங் காமுறப் புனைதலு

15.மின்னோ ரன்ன தொன்னெறி மரபினர்

பன்னருஞ் சிறப்பி னல்லா சிரிய
ரறனே பொருளே யன்பெனு மூன்றின்
றிறனறி பனுவல் செப்புங் காலை
முன்னர்க் கூறிய வெண்வகை யுறுப்பினு

20.ளேற்பன வுடைய ராகிப் பாற்படச்

சொல்லிய பொருண்மை சொல்லியாங் குணர்தலுஞ்
சொல்லிய வகையொடு சூழ்ந்துநன் கறிதலுந்
தன்னோ ரன்னோர்க்குத் தான்பயன் படுதலுஞ்
செய்ந்நன்றி யறிதலுந் தீச்சார் வின்மையு

25.மடிதடு மாற்ற மானம்பொச் சாப்புக்

கடுநோய் சீற்றங் களவே காம
மென்றிவை யின்மையுங் சென்றுவழி படுதலு