பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லிசைப் புலவருமாகிய பொய்கையாரையும் பிடித்துக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிட்டிருந்தான். பின்னர், ஆசிரியர் பொய்கையார் சோழன் செங்கணான் மீது'களவழி நாற்பது' என்னும் ஒரு செந்தமிழ் நூல்பாடிச் சேரமானைச் சிறை மீட்டனர். இதனை,

களவழிக்கவிதை பொய்கையுரை செய்யவுதியன் கால்வழித்தளையை வெட்டியரசிட்டவவனும்"

என்னும் கலிங்கத்துப்பரணிச் செய்யுளானு முணர்க (இராஜ பாரம்பரியம் -18).

இனித் 'தென்னவனாயுலகாண்ட செங்கணான்' என்னும் திருநாவலூரர் திருவாக்கை நுணுகியாராயுமிடத்து, இவன் பாண்டி நாட்டையும் ஜெயித்துத் தன்னாட்சிக் குட்படுத்தியிருக்க வேண்டு மென்பது புலப்படுகின்றது. மேற்கூறியதையே "மின்னாடு வேலேந்து விளைந்தவேளை விண்ணேறத் தனிவேலுய்த் துலக மாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன்" என்னும் திருமங்கை யாழ்வார் வாக்கும் பின்னும் வலியுடைத்தாமாறு செய்தலைக் காண்க. அன்றியும், இவனை, "தென்றமிழன் வடபுலக் கோன் சோழன்" என்று திருமங்கைமன்னன் புகழ்ந்துரைத்தமையால் இவன் வடநாடுகளையும் ஜெயித்து ஆட்சிபுரிந்தவனென்பது நன்கு தெளியப்படும். இவ்வரசனைக் "கழன்மன்னர்மணிமுடி மேற்காகமேறத் தெய்வவாள் வலங்கொண்டசோழன்"" என்றும், "வெங்கண்மா களிறுந்தி விண்ணிலேற்ற விறன்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த - செங்கணான் கோச்சோழன்' என்றும், "பாராளவரி வரென்றழுந்தை யேற்றப் படைமன்னருடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன் கோச்சோழன்" என்றும் பன்முறை தம் பாசுரங்களில் 1. இந்நூல் கடைச்சங்கமருவிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று 2 திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆறாம் பத்து 6-ஆவ அம்பரம் 6-வது பாசுரம். 3 திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆறாம் பத்து 6-வது அம்பரம் 5-வது பாசுரம். 4 திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து 6-வது அம்பரம் 3-வது பாசுரம். 5 திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து, ஆறாவது அம்பரம் 4-ஆவது பாசுரம். 6. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து, ஆறாவது அம்பரம்,9-ஆவது பாசுரம்.