உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


பிரான்மலையிலுள்ள பொன்னம்பலநாத
தொண்டைமானது கல்வெட்டு

(1) ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமான் மஹா மண்டலேசுவரன் அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராயிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பூர்வ (2) தெட்சிண பச்சிம உத்தர சமுத்திராதிபதி எம்மண்டலமும் கொண்டு எழுந்தருளிய ஸ்ரீகிருஷ்ண தேவ மகாராயர் பிருதுவிராச்சியம் பண்ணி அருளாநின்ற (3) சகாப்தம் 1440 இதன் மேல் வெகுதான்ய வருஷம் உத்தராயணத்து மிதுன நாயற்று அபரப்பட்சத்து அமாவாசியையும் மங்கலவாரமும் விருத்தி (4) யோகமும் பெற்ற இற்றை நாள் சூரியகிரண புண்ணிய காலத்து திருமலை நாட்டு திருக்கொடுங்குன்றத்து நாயினார் நல்ல மங்கைபாகற்கு அறந்தாங்கி அரசு அச்சமறி (5)யாத பெருமாள் முகிலின் கீழ்த்திரியும் இளவன்னியர் மிசுரகண்டன் ஆட்டுக்கு ஆணை வழங்கும் பெருமாள் ஏழுநாளையில் ஈழந் திறைகொண்ட பெருமா (6)ள் கோன் பாத..... யாத பெருமாள் காஞ்சிபுர வராதீசுவரான் ஆவுடைய தம்பிரானார் ஸ்ரீபாத பக்தன் ஏகப்பெருமாள் தொண்டைமானார் புத்திரன் (7) பொன்னம் பலநாத தொண்டைமானார் நாயினார் நல்ல மங்கைபாகற்கு உபையமாகக் கட்டின சிறு காலைச் சந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு (8) வேண்டும் நித்தம் நிமந்தங்களுக்கு நம் பேரால் கட்டின பொன்னம்பலநாத தொண்டைமானார் சந்தியாக அமுது செய்யும்படிக்குக்கொ (9)டுத்த இந்நாயினார்...... தேவ தாந.....நாமத்துக் காணியாக சோழபாண்டிய வளநாட்டு மேலூர்ப் பெரு நான்கெல்லைக்குட்பட்ட (10) தும் சாஉறிரண் யோதகதர பூர்வமாக திருநாமத்துக் காணியாக சந்திராரிதத்தவற் செல்லக் குடுத்த படியாலே இதுக்குள் உள்பட்ட (11) நிதிநிக்ஷேப ஜலபாஷாண கூப தடாகாதியும் தம்பிரானாற்கே உரித்தாகக்