உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறியல் அறப்போர் தீர்மான விளக்கம் (1) தமிழுக்கு முதன்மையிடம்; தடைக்கல்; ஏன்? எதனால்? விழுப்புரம் மாநாட்டுத் தீர்மானங் களை விளக்கி, டிசம்பர் 1ஆம் தேதி மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் ல முன்னால் நாம் நடத்தவிருக்கின்ற மறியல் அறப்போருக்கான ஆதரவைத் திரட்டவும், அதற்கான விளக்கங்களை அளிக்கவும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற கழகப் பொதுக் கூட்டங்களில் விரிவான விளக்கங்களை அளிப்பதற்காகப் பயன்படும் என்ற எண்ணத்துடன், அந்தத் தீர்மானங்களைப் பற்றிய கருத்துக்களைப் பொழிப்புரை போல் நான் தொடர்ந்து எழுதும் கடிதங்கள் வாயிலாக எடுத்துரைக்க இருக்கிறேன். அந்த வரிசையில் இது முதல் கடிதம். க விழுப்புரம் மாநாட்டுத் தீர்மானங்களில் “தமிழை மத்திய ஆட்சி மொழியாக ஆக்குவது, செம்மொழியாக அறிவிப்பது' என்பவை மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள் ஆகும். தமிழ் காக்கும் மொழிப் போராட்டத்தில் 1938 முதல், 1965 மொழிப் புரட்சி வரையில் திராவிட இயக்கத்தின் பங்கும், குறிப்பாக தி.மு. கழகத்தின் பங்கும் தியாகமும் நாடறிந்த ஒன்றாகும். இப்போது விழுப்புரம் தீர்மானங்களையொட்டி தமிழ் மொழிக்கு முதன்மையிடம் மத்திய அளவிலும், மாநிலத்திலும் போதுமான அளவுக்கு அமையாமைக்குத் தடைக்கல் ? எது : என்ற பிரச்சினை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, பாண்டிச்சேரியில் அண்மையில் - ய