உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆழ்ந்து சிந்தித்து சிந்தித்து வேறு வழியின்றி எடுத்த முடிவு இந்த அறப்போராட்டம் என்பதை அனைவரும் அறிவார்கள். மிதிபட மிதிபடப் புழுக் கூட தலைதூக்கி எதிர்ப்பைக் காட்டும் என்கிற போது - இங்கே 'இம்' என்றால் சிறைவாசம் - 'ஏன்' என்றால் வனவாசம் எனுமளவுக்கு ஜார் ஆட்சியின் கொடுமைகள் கொலு வைக்கப்படுவதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். பிரேத பரிசோதனை ஜனநாயகத்திற்குப் சர்வாதிகாரத்திற்குப் பிரமோற்சவம் என்றால் - நாம் வாழ்வது நாட்டிலா ? காட்டிலா? என்ற கேள்விக்கு விரைவில் விடை காண ஒரு வழி காண வேண்டாமா? அந்த வழிதான் டிசம்பர் முதல் நாளன்று நாம் ஈடுபட இருக்கிற மறியல் அறப்போர்! போராட்டங்களைத் தேடிப் போகிறவர்களுமல்ல; வந்த போராட்டங்களை விட்டு விட்டு ஓடிப் போகிறவர்களுமல்ல என்று நமது தலைவர் அண்ணா முழங்கிடுவாரே; அந்த முழக்கத்தின் எதிரொலிதான்; இதோ டிசம்பர் முதல் நாள் கேட்க இருக்கிற முரசொலி! ஏழை மேலும் நலிகிறான் தொழிலாளி மெலிகிறான் - - - எந்நாளும் பாடுபடும் உழவன் உயிர்வாதை அடைகிறான் - அன்றாடம் அரசு ஊழியம் - ஆசிரியர் பணி - அட்டியின்றிச் செய்து பெற்றிருந்த உரிமைகளையும், சலுகைகளையும் பறிகொடுத்துப் பரதவிக்கும் பராரி போல ஒரு கூட்டம்; ஆம் - படித்துப் பணியேற்ற கூட்டம் - இவர் அவர் என்றில்லாமல் எல்லோர் கண்களிலும் நீர் - ஆமாம்; இரத்தக் கண்ணீர்!