பக்கம்:தீபம் யுகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 39 4. வழிகாட்டும் தலையங்கங்கள் துணிவு, தன்னம்பிக்கை, எதிர்பாராத திருப்பங்களில் மலைத் துப் போய் நின்று விடாமை தான் சொல்லப்போகும் கருத்துக்களை முதலில் தான் நன்றாக உணர்ந்து ஜீரணித்து, பிறகு பிறருக்குச் சொல் வது ஆகியவற்றோடு கடந்த காலத்தைப் பற்றிய அறிவு, நிகழ்காலத் தைப் பற்றிய தெளிவு, எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு, எதிர்ப்பைக் கண்டு வளைந்து கொடுத்து விடாமலிருத்தல் ஆகியவை ஓர் இலக்கி யப் படைப்பாளிக்கு மிகமிகத் தேவையானவை என்று நினைக்கி றேன்.” இவ்விதம் அறிவித்த நா. பா. இப் பண்புகளைக் கொண்டிருந் தார். அவருடைய எழுத்துக்கள் இதற்கு சான்று கூறும். விசேஷமாக, 'தீபம்' பத்திரிகையில் அவர் எழுதியுள்ளதலையங்கங்கள் இப்பண்பு களை நன்கு வெளிப்படுத்துகின்றன. . தமிழ் மறுமலர்ச்சி இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டும் சிந்தனை கள் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு துணை புரியும் ஆலோசனை கள், பிறமொழி இலக்கிய வளர்ச்சியோடு தமிழ் இலக்கிய வளர்ச் சியை ஒப்பிட்டு, நேர்மையாக விமர்சித்து, புதிய கருத்துக்களை வெளியிடல், தற்கால இலக்கியச் சூழல் மற்றும் பத்திரிகைகளின் போக்குகளை சுட்டிக்காட்டுவது - இப்படி அவசியமான கருத்துக்க ளையும் ஆழ்ந்த சிந்தனைகளையும், சமூகப் பிரக்ஞையோடும் இலக் கிய வேகத்தோடும் அவர் தலையங்கங்களில் எடுத்துக் கூறியுள்ளார். சில தலையங்கங்கள் இன்று கூட மிகப் பொருத்தமானவையா கக் காணப்படுகின்றன. . 'தீபம் 15வது இதழில் (ஜூன் 1966) நா.பா.எழுதியுள்ள தமிழ் மறுமலர்ச்சி இலக்கியமும் கருத்து ஒருமைப்பாடும் என்ற தலையங் கம் மிக முக்கியமானது. - . "புதுமைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் சாதக பாதகங்களை ஆராய்வதிலும், விமர்சனம் செய்திவலும், விநோதமான ஒரு மனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/40&oldid=923234" இலிருந்து மீள்விக்கப்பட்டது