பக்கம்:துங்கபத்திரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

பேராண்மை மிக்க தனது தந்தைக்குத் தெரிந்துவிடக் கூடாது என்ற கவலைதான் விசுவநாதனை தீராத சோகத்தில் தள்ளி வைத்திருந்தது. அச்சம் ஒரு பக்கம், ஆசை ஒரு பக்கம். தோல்வியின் துயரத்திற்கு மருந்து உண்டு; வறுமையின் பொறுமைக்கு ஆறுதல் கிடைக்கும்; காதல் ரகசியத்தை யாரிடம் கூறி சாந்தி பெறுவது? துங்கபத்திரை ஒருவளைத் தவிர வேறு துணை இருப்பதாக அவனுக்குப் புலப்படவில்லை. வழக்கமாக அவளைச் சந்திக்கும் வெள்ளிக் கிழமை வரும்வரை துர்ஜதியார் அவிழ்த்து விட்டுப் போன சோகப் பெருஞ்சுமையை எப்படித் தாங்கிக்கொண்டு இருப்பது என்பதையே எண்ணி எண்ணி அவன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது இரவு வந்து விட்டது. நட்சத்திரங்கள் முளைத்துவிட்டன. நாணம் இருந்த மணப் பெண்ணைப் போல் பிறை நிலவு மிதந்து கொண்டிருந்தது. விசுவநாதன் எதிர்பார்க்கவில்லை. பலகணி வழியாக ஓர் ஓலை விழுந்தது.

அன்புள்ள அத்தானுக்கு,

நலம், நலம் விழைகின்றேன். இன்று இரவு நிலா சாய்ந்த பிறகு தவறாது, மறவாது என்னைச் சந்திக்க வேண்டுகிறேன். அத்தானைக் காண நான் நிலா முற்றத்தில் காத்திருப்பேன். மறந்து விடாதீர்கள் அத்தான்! அவசரம், அவசியம்!

தங்கள்,

துங்கபத்திரை.

துன்பத்தால் சருகாகிக் கொண்டிருந்த விசுவநாதன் இதயத்தில் இந்த முடங்கல் தண்ணீர் தெளித்தது. கண்ணீர்ப் பெருவெள்ளத்தில் அடித்துக்கொண்டுபோன கடந்தகால இன்ப நினைவுகளை அவன் மனக்கண் முன் நிழலாட விட்டது. நகரம் துயில் கொண்ட பிறகு துங்கபத்திரையோடு அவன் நெளிந்தும், வளைந்தும், புரண்டும், சுருண்டும், துள்ளியும், தோய்ந்தும் விளையாடிய சம்பவங்கள் அவன் உடம்பில் சோர்ந்து சிடந்த ரத்த ஓட்டத்தை ஆர்த் தெழுந்து ஓடச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/47&oldid=1507884" இலிருந்து மீள்விக்கப்பட்டது