உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துடிக்கும் இளமை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 என்று சுடு சொல்லால் தாக்கப் பட்டோம். ஆயி னும் வெற்றி நமக்குத்தான் கிடைத்தது. நம் நோக் கம் கம்பராமாயண நூலே நாட்டில் கி க்கமுடி யாமல் செய்துவிடவேண்டுமென்பதல்ல. கம்பன் செய்த தவறை நாட்டிலே எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதுதான் நம் குறிக்கோள். கம்பராமாயணம் திராவிடரை அரக்கர்கள் குரங்கு கள் என்று சித்தரிக்கும் சிலந்திக்கூடு. ஆகவே அதை வெறுக்கவேண்டுமென்கிறோம். அடிப்படை யான வெறுப்பே அதுதான் ஆரிய ராமனை கம்பன் கடவுள் என்று கூறிவைத்தான். அந்தக் கயமைத் தனத்தைக் கண்டித்தோம். அப்படிப்பட்ட ஒரு நூல்திராவிடரின் பூஜைக்குரிய தாயிருப்பது தன்மானமற்றசெயல் என்று விளக்கி னோம்காலத்துக்கேற்றவாறுகம்பராமாயணத்திலே உள்ள கருத்துக்களை அனுமதிக்கத்தான் வேண்டு மென்றார்கள் கம்பதாசர்கள்! நாமோ அவைகளை ஆட்சேபிக்கவில்லை.ஒரு இனத்தையே இழிவுபடுத் தும் முறையில் கம்பன் திராவிடரைக் காட்டிக் கொடுத்திருக்கிறான் என்பதே நம்முடைய தலையாய குற்றச்சாட்டு, அதைத்தான் எதிர்த்துப் போராடி னர் புலவர் பலர். அந்த நேரத்திலேகூட நாம் கூறி னோம் நாங்கள் இலக்கிய விரோதிகளல்ல, சிலப்பதி காரம் போன்ற நூல்கள் அக்காலக் கருத்துக்கள் பல கொண்டனவாயினும் திராவிடரை இழித்துப் பேசவில்லை என்பதோடு திராவிடரை உயர்த்திக் காட்டியிருக்கின்றன. அவைகளை நாங்கள் வெறுப்