பக்கம்:துணிந்தவன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 துணிந்தவன் அழிந்திருந்தன. அவை கண்ணிரால் கலைந்திருக்க வேண்டும் என்றே அவனுக்குப்பட்டது. "அத்தான், நீங்கள் ஏன் அன்று என்னை இங்கே விட்டுவிட்டுப் போனிர்கள்? என்னையும் உங்களோடு கூட்டிப் போயிருக்கக்கூடாதா? நீங்கள் உயர்வு அடையா மல் கஷ்டப்பட்டுக் கேவல நிலை அடைந்திருந்தால் கூட, நானும் உங்களோடு வாழ்ந்து, உங்களோடு மகிழ் வுடன் சாக முன்வந்திருப்பேன். மணமான நான் இப்படி எழுதக்கூடாதுதான். ஆனால் என் வாழ்க்கையிலே நான் என்ன சுகத்தைக் கண்டு விட்டேன்? சொத்து இருக்கிறது. வீடு வாசல், பால் மாடுகள் எதற்கும் குறைவில்லை. குழந்தைகளும் இருக்கின்றன. வாஸ்தவம், இருந்தாலும் என் கணவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை. அதனால் அவர் குடும்பத்தையும் நாசமாக்கி விட்டார். அவருள் சந்தேகம் என்கிற விஷப்பூச்சி அரித்துக்கொண்டே இருக் கிறது. அதனால் அவர் என்னைக் கொல்லாமல் கொன்று சித்திரவதை செய்துவருகிறார். ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? ஆரம்பத்தில் சில மாதங்கள் புதுமோகம். வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்தது. பிறகு யாரோ என்னை யும் எனது அத்தை மகனையும் பற்றி அவரிடம் சொல்லி யிருக்கிறார்கள். பிறகு அந்த அத்தை பிள்ளை சினிமா வில் நடித்துப் புகழ் பெற ஆரம்பிக்கவும், எங்கள் வீட்டில் சனி புகுந்துவிட்டது. என் கணவரைப் போன்ற சந்தேகப் பிராணி வேறு யாராவது இருப்பார்களோ என்னவோ, தெரியாது. இயல்பாகவே சந்தேகம் கொண்டு என்னைத் துன்பப்படுத்தி வந்தவருக்கு ஒரு பிடி கிடைத்துவிட்டது. பட்டணத்துத் தெருவில் நீங்கள் மாமாவுடன் சண்டை பிடித்தீர்களே, அன்று நானும் என் கணவரும் உங்கள் முன்னால் வராமல் இருந்திருக்கக் கூடாதா என நான் பிறகு பல தடவைகள் எண்ணியது உண்டு. அவரும் நானும் ஒரு கடையில் நின்றோம். கொஞ்சநேரம் கழித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/106&oldid=923464" இலிருந்து மீள்விக்கப்பட்டது