பக்கம்:துணிந்தவன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 63 வசந்தா, 'உம்... அப்படியானால் நாம் நேரே அவரைச் சந்திக்கப் போகலாம் என்றாள். 'யாரை 'படாதிபதி ஒருவரை எனக்குத் தெரியும். அவர் இப்ப புதிதாக ஒருபடம் தயாரிக்கத் திட்டமிட்டிருக் கிறார். படத்தின்பேர், கதை, யார் யார் நடிக்கிறார்கள் என்பதெதுவும் எனக்குத் தெரியாது. அவரே கதை எழுதி யிருப்பதாகவும், வசனம் எழுத உதவிக்கு ஒரு ஆள் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார் அந்த முதலாளி. அப்படி ஒரு ஆள் அவருக்கு அகப்பட்டிருந்தாலும் பரவால்லே. நான் சொன்னால், அவர் உங்களையும் எடுத்துக்கொள்வார். கம்பெனி வீடு என்கிற இடம் ரொம்ப வசதியாகவும், சரியான சோம்பேறி மடமாகவும் விளங்கு கிறது. வேளை தவறாமல் அருமையான சாப்பாடு; சாயங்காலம் ஸ்வீட், காரம், காப்பி - இதற்கெல்லாம் குறையே கிடையாது. நீங்கள் அங்கு போனபிறகு நிலை மையை ஆராய்ந்து, உங்கள் திறமைக்குத் தக்கபடி.." 'வந்தனம் வசந்தா. இதற்குமேல் எனக்கு வழி காட்டவேண்டிய சிரமம் உனக்கு வேண்டாம் ' என்று ஒரு கும்பிடு போட்டான் மாதவன். சிரிப்பின் செல்வியான வசந்தா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். 'அந்தப் படாதிபதியின் பெயர் என்னவோ?’’ என்று மாதவன் கேட்டான். "பிறவிப் பெருமாள் உண்மையிலேயே அவர் பெரிய ஆள்தான்' என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/75&oldid=923551" இலிருந்து மீள்விக்கப்பட்டது