பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

117


ரிஜிஸ்டிரார் காரியாலயத்தில் வேலையாயிருக்கிறார். அவர் மூலமாக........"

"ஊம்; அப்படியா?" என்று யோசனையோடு கேட்ட பிள்ளையவர்கள், "அவன்களை ஏண்டா விசாரித்தாய்? நம்மவர்கள் எதிலும் தலையெடுக்கக் கூடாது என்று கங்கணங் சுட்டிக்கொண்டு வேலை செய்பவர்களாயிற்றே! விரோதியிடம் போய் ஜாதகம் கேட்பது போல......அவன்களண்டை ... போய்......அவன்களே கூட 'மார்க்'கைச் சுழித்து விட்டிருப்பான்களே! 'எக்ஸாமினர்கள்' போட்டிருப்பதைக் கூட அடித்து ......" என்று பேசிக்கொண்டே போனார்.

சிவகுமாரன் சஞ்சலத்தோடு தந்தையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"நீ சரியாகப் படித்திருந்தால், இப்படியெல்லாம் ஏண்டா கேட்டு அலையணும்?....." என்று ஆதங்கத்தோடு கேட்ட... சதானந்தம் பிள்ளை, "உனக்குப் படிப்பின் மீது எங்கே கவனம் இருக்கு? 'அங்கே கூட்டம்; இங்கே பந்தாட்டம்' என்றல்லவா திரிந்து கொண்டிருக்கிறாய்? ஊர் விவகாரத்தில் கவனம் போய் விட்டால் உருப்பட்டாற்போல் தான். படிக்கிற பிள்ளைக்கு அரசியல், அந்தக்கட்சி இந்தக்கட்சி என்ற வம்பு தும்பு எதுக்கடா? காலாகாலத்திலே காலேஜுக்குப் போனோமா, திருப்பி வந்தோமா? என்றில்லாமல் ..."

கணவனுடைய உரத்த குரலைக் கேட்டுவிட்டு அங்கு வந்த திலகவதி, "என்ன இது காலையிவே? இரைச்சல்! சிவன் என்ன செய்தான்?....." என்று வினவினாள்.

"அத்தான் இவ்வளவு சத்தம் போட்டு எப்போதும் பேசியதில்லையே. என்னமோ ஏதோ" என்று எண்ணிய வளாய், அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்த மங்கையர்க்கரசி கையில் துடுப்புடன் அக்காவின் பின்னாலேயே அங்கு வந்து பக்கம் ஒதுங்கி நின்று ஒற்றுக் கேட்கலானாள்.

மனைவியைப் பார்த்ததும் பிள்ளையவர்களுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. "என்ன செய்தான? உன்மகன் படித்துக்