பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தும்பைப் பூ

 இந்த இழவையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்......?”

"நம்ம சிவன் மேற்படி மாணவர் சம்மேளனத்தில் பொறுப்பேற்ற பின்னர், எல்லாக் கிளர்ச்சிகளிலும் முன்னணியில் இருக்கிறாளும். அவன் இவ்விதம் இருப்பது உங்களுக்கு உடன்பாடாய்த் தானிருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் ஸ்தாபனத்துக் குள்ளிருந்து கண்டிக்க முடியாதவற்றை, உங்கள் பிள்ளையைக் கொண்டு வெளியில் கண்டிக்கச் சொல்லுகிறீர்கள் என்பது ஆட்சியிலிருப்போரது அபிப்பிராயம்....."

"அட, மடப் பயல்களா? இவர்களுடைய தவறான போக்கைக் கண்டிப்பதற்கு என் தநயனையா ஏவவேண்டும்? எனக்குத் தைரியமில்லையா? இவர்கள் செய்யக் கூடிய தகாத செய்கைகளைக் கண்டிக்க வேண்டுமென்றால் நானே கண்டித்து விட்டுப் போகிறேன். என் பிள்ளையிடம் சொல்லிக் கண்டிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் காங்கிரஸ் சுதந்திரம் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் பதவிப் போட்டிக்காக நடந்த தில்லுமல்லுகளையும், முறை தவறாண காரியங்களையும் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும் எத்தனையோ முறை கடுமையாகக் கண்டித்திருக்கிறேன். அப்படியிருக்க ...."


இதெல்லாம்தான் அவர்களுக்கு மனக் கடுப்பு. இவற்றைக் கருத்திற் கொண்டுதான் அவர்கள் உங்களைக் கண்டால் கடுவன் பூனை போல் இருந்து கொண்டு உங்கள்மீது பழி தீர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்......'

"பேடிப்பயல்கள்.இவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளட்டும். இதற்கெல்லாம் பயந்து விட்டால், உலகில் மனிதன் வாழ முடியுமா?......”

மாசிலாமணி முதலியார் இரக்கமாகப் பேசத் தொடங்கினார்-குரங்கு கையில் பூமாலை அகப்பட்டமாதிரி