பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தும்பைப் பூ

பெற்று மகிழ்ந்து இப்போது இடையில் பிரிந்துபோக வேண்டியிருக்கிறதே என்று எண்ணியபோதுதான் அவள் கண்கள் இரத்தக் கண்ணீர் வடித்தன.

“நாதா இருபத்தைந்து வருடங்கள் உங்களுடன் இன்ப வாழ்க்கை நடத்தினேன். நீங்கள் எனக்கு வாழ்க்கையில் யாதொரு குறையும் வைக்கவில்லை. ஆனால் நான்தான் ஏதாயினும் தவறு புரிந்திருப்பேன். தங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறியிருப்பேன்; பணிவிடைகளில் பிழை புரிந்திருப்பேன். ஆனால், அவை நான் தெரிந்து செய்தனவாக இரா. எனினும் நீங்கள் இச் சமயத்தில் என்னை மன்னித்து அருள வேண்டும். நான் மறுபடியும் பிறக்க நேர்ந்தால் உங்களோடு வாழக் கூடிய பேற்றையும் உங்களுக்குக் குற்றேவல் செய்யக் கூடிய உரிமையையும் வழங்கியருள வேண்டுமென்று நமது குல தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன்.”

சகானந்தம் பிள்ளை மனைவியின் வாயைத் தம் கரத்தால் பொத்தி, “திலகம் இதென்ன பேச்சு? நீ நீடுழி வாழ வேண்டும். இப்படி இடை நடுவில் விட்டுப் போக நான் உன்னை ஒருகாலும் விடமாட்டேன்...” என்று ஆவேசம் வந்தவர்போல் பேசினார்.

திலகவதி இரக்கத்தோடு கணவனை ஏறிட்டுப் பார்த்து, “எனக்கு மட்டும் உங்களை விட்டுப் போக வேண்டுமென்ற விருப்பமா? என்ன! இந்தச் சண்டாள நோய் வந்து நம்மைப் பிரித்துவிடச் சதி செய்கிறதே! என் செய்வது!......” என்று கூறிப் பின், “நாதா கொஞ்சம் நகர்ந்து வந்து என் தலையையெடுத்து உங்கள் மடிமீது வைத்துக் கொள்ளுங்கள்...கொஞ்சம் அப்படி விச்ராந்தியாயிருந்து உயிர்விட விரும்புகிறேன்?”என்றாள்.

தின் தலையை எடுத்து மடிமீது வைத்துக்கொள்ள வேண்டுமென்று திலகவதி சொன்னவுடனே, பரிவோடு எடுத்துக் கொண்ட பிள்ளையவர்கள் "விச்ராந்தியாய் உயிர்