பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

41

காபி வேண்டுமானால் கொடுக்கச் சொல்லுங்கள்...” என்று கூறினார்.

சதானந்தம் பிள்ளை சட்டையைக் கழற்றிக் கொண்டே, “நீங்கள் உட்காருங்கள், முதலியார்வாள்! உங்களுக்குத் தெரியாதா? வீட்டுக்கு வந்துவிட்டோமானால், நம் விருப்பம், தேவை, அதிகாரம் எல்லாம் ஒன்றும் எடுபடாது என்று, வீட்டு ராணிகள் வைத்தது தான் சட்டம், அதை மீறினோமானால் சாப்பாடு கூடக் கிடைக்காது. வெளியிலேதான் நம்முடைய அமர்த்தல் ஆட்சி எல்லாம் நடக்கும். இங்கே நமது தேவைகளைச் சொல்ல வேண்டும், அவர்கள் கொடுப்பதை மறுபேச்சுச் சொல்லாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்...” என்று புன்சிரிப்புடன் சொன்னார்.

மாசிலாமணி முதலியார் கல கலவெனச் சிரித்தவாறு “அது என்னமோ வாஸ்தவம்தான், அண்ணா” என்றார்.

உள்ளே அடியெடுத்து வைத்த திலகவதி தன் கணவன் பேச்சைக் கேட்டு நின்று, “நாங்கள் என்ன அவ்வளவு பொல்லாதவர்களா.....?” என்று மெல்லச் சொன்னாள்.

இதற்குள் மங்கையர்க்கரசி ஒரு தட்டில் ஓமப்பொடி பிஸ்கெட், மலைவாழைப்பழம், சாற்றுக்கொடி ஆகியவைகளை வைத்துக் கொண்டு வந்து திலகவதியிடம் கொடுத்தாள். இவளுடைய சமயோசிதப் புத்தியைக் கண்டு திலகவதி வியப்புற்றாள். அடுத்து இரண்டு டம்ளர்களில் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “இதோ ஒரு நிமிஷத்தில் காபி கொண்டு வருகிறேன், அக்கா!” என்று கூறிவிட்டுப் போனாள் மங்கையர்க்கரசி.

திலகவதி இவற்றைக் கொண்டு வந்து வட்ட மேஜை மீது வைத்தாள்.

“கையைக் கழுவிக் கொள்ள பேஸின் கொண்டு வரச் சொல்லு, திலகம்”” என்று கூறிய சதானந்தம் பிள்ளை,

து.—3